நீண்ட நாட்களுக்கு பிரியா விடை சந்திப்பு
மறு நாள் காலையில் என் அலுவல் தொடர்பான பணிகளை முடித்து விட்டு பிற்பகலில் நேரடியாக மருத்துவ மனைக்கே சென்று விட்டேன்.
அங்கு என்னவளும் என்னவளது மருமகளும் மாத்திரம் இருந்தார்கள். என்னவளிடம் மருமகளின் வளர்ப்புத் தாயார் பற்றி விசாரித்த சமயம் நேற்று குழந்தை பிறந்ததிலிருந்து இங்கேயே தங்கி விட்டு தற்போது தான் வீட்டிற்குப் போயிருக்கின்றார்கள். நான் வீட்டிலேயே நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மருமகளை நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொன்னதற்கு என்னால் அவ்வாறு இருக்க முடியாது. எனது பேத்திக்கு அருகிலேயே இருக்கக் கூடிய அளவுக்கு எனக்கு இளமை திரும்பி விட்டது என்று சந்தோஷமாக இருக்கின்றார்கள்.
இவ்வாறான சந்தோஷம் எனக்கு வாழ்க்கையில் முதல் முறையாகக் கிடைத்து இருக்கின்றது எனச் சொல்லி வீட்டிற்குப் போய் சீக்கிரம் குளித்து விட்டு உடனே சாப்பிட்டு விட்டு மீண்டும் இங்கு வந்து விடுவேன். மருத்துவ மனையிலிருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரையில் நான் தான் மருத்துவ மனையில் இருப்பேன். வீட்டிற்கு அழைத்து வந்த பின்னரும் குழந்தையை நான் தான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லி விட்டு சென்றுள்ளார்கள் என்று தெரிவித்தாள்.
அதன் பின்னர் மருமகளுக்கு எப்போது மயக்கம் தெளிந்தது என்று கேட்டதற்கு இரவு சுமார் பதினோரு மணிக்குத் தான் மயக்கம் தெளிந்தது என்றும் குழந்தையைப் பார்க்க வர வேண்டிய உறவினர்கள் அனைவரும் வந்து சென்று விட்டார்கள் எனவும் சொல்லி நீங்கள் உறவினர்களைப் பற்றி கவலைப்படாமல் இங்கேயே என்னுடனும் என்னுடைய மருமகளுடனும் தாராளமாக இருக்கலாம் என்றும் சொன்னாள்.
உடனே என்னவளின் மருமகள் நீங்கள் வந்திருப்பது தெரிந்ததும் என்னுடைய அம்மாவிடம் சொல்லி உங்களை இங்கு வரவழைத்தேன். நான் என்ன சொன்னேனோ அதே வார்த்தைகளை அப்படியே என் அம்மா சொல்லித்தான் நீங்கள் நேற்று வந்தீர்கள் என்றும் அதன் பின்னர் நடந்தவைகள் அனைத்தையும் அவளது வளர்ப்புத் தாயார் நினைவு படுத்திக் கூறி மிகவும் சந்தோஷப் பட்டார்கள் என்றும் தெரிவித்தாள்.
நாங்கள் மூவரும் ஒரே டம்ளர் காப்பியை பகிர்ந்து குடித்ததையும் எனது மாமியாருடன் சேர்ந்து எனது நெற்றியில் பொட்டு வைத்து ஆசீர்வதித்த இரண்டு மணி நேரத்தில் எனக்கு சுகப்பிரசவம் ஆனதையும் குழந்தையை நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் முத்தமிட்டதையும் சொல்லி மிகவும் உணர்ச்சி வசப்பட்ட போது அவர்களின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தேன் என்று சொன்னவுடன் என்னவள் உனது நாத்தனாருக்கும் நாம் இருவரும் ஒரே நேரத்தில் இரண்டு காதுகளில் மூன்று முறை விஜி என்று சொல்லி பெயர் வைத்தோம் என்பதனை சந்தோஷத்துடன் தெரிவித்தாள்.
உங்கள் இருவருக்கிடையே உள்ள உண்மையான அன்பும் அக்கரையும் பாசமும் நெருக்கமும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது. எனவே தான் உங்களுடன் சேர்ந்து காப்பி குடித்து விட்டு ஆசீர்வதிக்கச் சொன்னேன். நீங்கள் இருவரும் சேர்ந்து அவ்வாறு செய்த ஒரே காரணத்தால் தான் இன்னும் ஒரு வார காலத்தில் குழந்தை பிறக்கும் என்று சொன்ன டாக்டர்களே ஆச்சர்யப்படும் வகையில் நேற்றே எனக்கு சுகப்பிரசவம் ஆகி குழந்தை பிறந்து விட்டது என்று மன நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.
எனக்கு தாய் தந்தை இருவரும் கிடையாது. என்னுடைய வளர்ப்புத் தாயார் என்னிடம் எவ்வளவு தான் அன்பாகவும் பாசமாகவும் இருந்தாலும் தமது உறவுகள் அதாவது மகன்கள் மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள் வந்து விட்டால் அவர்களுக்கு முன்னர் என் மீது அன்பினை வெளிக் காட்ட முடியாமல் தவிப்பார்கள்.
ஆனால் உங்கள் உறவு எப்படியெனில் "சொந்தமில்லாத சொந்தங்கள்" என்பது போல.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருக்கும் ஆனால் அந்த தாமரை இலையினை தண்ணீரிலிருந்து எடுத்து விட்டால் தண்ணீரிலிருந்து பிரிந்த காரணத்தால் அந்த தாமரை இலை வாடி விடும்.
அது போல உங்கள் இருவரின் உறவு நிலை மிகவும் நெருக்கமாக ஆனால் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. இரண்டு பேருக்கும் இடையே இருந்த உண்மையான காதல் வெற்றியடையாத போதிலும் இத்தனை வருடங்கள் வரையில் ஒருவரை ஒருவர் மறந்து விடாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல். ஒருவர் மீது மற்றொருவர் அக்கரை செலுத்துவது குறையாமல் இணை பிரியாத அன்புடன். பாசத்துடன் ஒற்றுமையாக இருப்பது என்பது பூர்வ ஜென்ம பந்தம். இது ஆண்டவன் போட்ட முடிச்சு. அது எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது. இவ்வாறான உறவுகள் இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று சொன்னாள்.
உடனே என்னவள் உன்னுடைய திருமணத்திற்குப் பின்னர் நம்முடைய வீட்டிற்கு இவர் வந்த சமயம் சாப்பிட்டு முடித்தவுடன் வெற்றிலை பாக்கு வாங்கி வரட்டுமா அல்லது பீடா வாங்கி வரட்டுமா என்று கேட்டதற்கு இவருக்கு வெற்றிலை பாக்கு பீடி சிகரட் மது போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது என்று சொன்னேன். அதற்கு காரணம் கேட்ட சமயம் நான் சொல்லவில்லை.
இப்போது சொல்கின்றேன். நான் இவரைக் காதலிக்கும் சமயம் ஒரே ஒரு முறை எனது ஆள்காட்டி விரலை அதே காம்பவுண்டில் குடியிருந்த நம் இருவருக்கும் நெருங்கிய தோழியர் இருவர் முன்னிலையில் இவர் தொட்ட ஒரே காரணத்தால் எனக்கு பிறர் தவறு என்று சொல்லும் எந்தப் பொருட்களையும் என் விரல் பட்ட கைகளால் நான் தொட மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு அதனை இன்று வரை கடைப்பிடிக்கின்றார்.
என்னை இவர் காதலித்த சமயம் முதன் முதலாக என்னுடைய ஆள்காட்டி விரலைத் தொட்ட போது இவர் சொன்ன வார்த்தைகள் ஆறு ஆண்டுகள் கழித்து எனது திருமணத்திற்குப் பின்னர் வெளியான வசந்த மாளிகை படத்தில் வரும் ஒரு பாட்டில் "அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்" என்று வரும். அந்த பாடலின் வரிகளைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இன்று வரையில் காப்பாற்றுகின்ற இவரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என்று நினைத்து ஏங்கி தவித்து எந்த நேரத்திலும் என்னைச் சுற்றி யார் இருந்தாலும் எனனையும் மறந்து நான் அழ ஆரம்பித்து விடுவேன் என்று கூறிய சமயம் அவள் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் என்னை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திடீரென கட்டாயத் திருமணம் செய்து கொண்ட உனது மாமனார் எப்போதும் மது போதையில் தான் இருப்பார். வாயில் எப்போதும் பாக்கு இருந்து கொண்டே இருக்கும். எனக்கு அந்த வாடை பிடிக்கவே பிடிக்காது.
உன் மாமனார் என்னை மணந்த பின்னர் இவரைப் பார்த்த முதல் சமயம் யாரோ ஒருவர் என்று சொன்னார். இரண்டாவது சமயம் உனக்கு தெரிந்தவர் என்று சொன்னார். மூன்றாவதாகப் பார்த்த சமயம் உனக்கு வேண்டியவர் என்று சொன்னார். அதற்குப் பின்னர் தான் இவரிடம் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். அதன் பின்னர் இவர் வந்தால் எதுவும் பேசாமல் இவர் பேசுவதை கேட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார். சில நேரங்களில் வெளியில் வேலை இருக்கின்றது என்று சொல்லி விட்டுப் போய் புகை பிடித்து முடிந்த பின்னர் நீண்ட நேரம் கழித்து தான் வீடு திரும்புவார்.
உன்னிடம் என்னுடைய காதலை மறைக்காமல் கூறி நீ தெரிந்து கொண்ட ஒரே காரணத்தால் அதே போன்று உன் முன்னிலையில் இன்றைக்கு என் விரலை எப்படித் தொட்டார் என்று நீ பார்க்க மறுபடியும் தொட அனுமதிக்கின்றேன் என்று அவள் தனது ஆள்காட்டி விரலை நீட்ட நானும் மீண்டும் ஒரு முறை அதே போன்று தொட்டேன்.

இந்த நேரத்தில் என்னவளின் மருமகள் என்னிடம் நீங்கள் என் மாமியாரை நினைக்கும் மலரும் நினைவுகள் பற்றிச் சொல்லுங்களேன் என்றாள்.
நானும் இவளும் காதலிக்கும் சமயம் நான் இவளுடைய குடும்பத்தாருடன் அடிக்கடி இரவுக் காட்சிக்கு திரைப்படம் பார்க்கச் செல்வேன். நானும் இவளும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர முடியாவிட்டாலும் தியேட்டர்களில் நடைபாதைக்கு இருபுறமும் இருக்கும் இருக்கைகளில் ஒரு பக்கம் நானும் மறு பக்கம் அவளும் அருகருகே அமர்ந்து படம் பார்ப்பதில் தனி குஷி நம் இருவருக்கும். திரைப்படம் முடிந்து வரும் சமயம் இவளது தாயாரும் மற்றவர்களும் மெதுவாக நடந்து வருவார்கள். நானும் இவளும் நாம் பேசுவது பிறருக்குக் கேட்கக் கூடாது என்பதற்காக 30 அடி தூரம் முன்னால் சந்தோஷமாக பேசிக் கொண்டே நடந்து வந்து வீடு திரும்புவோம். அவ்வாறு நாங்கள் பார்த்த திரைப்படங்களில் ஒன்று நெஞ்சிருக்கும் வரை. அந்தப் படத்தில் வரும் பாடலில் “வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன். வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன். கண்ணில் நிரை காணாமல் கவலை ஏதும் கூறாமல் என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன். எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு” என்னும் வரிகளை மனப்பாடம் செய்து எப்போதும் என்னிடம் பாடிக் கொண்டே இருப்பாள். படம் பார்த்ததிலிருந்து நான் வேலையில் சேரும் நாள் வரைக்கும் ஏறக்குறைய நான்கரை ஆண்டுகள். நான் வேலையில் சேர்ந்த பின்னர் எங்கும் எப்போதும் என்னைச் சுற்றி நான்கைந்து பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். எனவே நான் என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் எப்போதும் இவள் நினைவில் தவிப்பேன்.
இதன் பின்னர் என்னவள் தொடர்ந்தாள்.
என்னைச் சந்தித்த பின்னர் என்னுடைய முதலாவது பிறந்த நாளுக்கு இவர் வாங்கிக் கொடுத்த அன்புப் பரிசு தான் என் கழுத்தில் இருக்கும் இந்த டாலர் என்று சொல்லி டாலரைக் காட்டினாள்.
நாம் இருவரும் நெருங்கிய காதலர்களாக இருந்த சமயம் தீபாவளிப் பண்டிகைக்காக இவர் எனக்கு எந்த மாதிரியான நிறத்தில் உடைகள் பிடிக்குமோ அது மாதிரியான நிறத்தில் பாவாடை தாவணி இரவிக்கை மற்றும் உள்ளாடைகள் அனைத்தையும் வாங்கி வந்திருந்தார். நான் தீபாவளியன்று மற்ற உறவினர்களுடன் கோவிலுக்குச் சென்று திரும்பும் சமயம் இவர் வீட்டிற்குள்ளிருந்து வெளியே விழுவதைப் பார்த்தேன். என்னை திருமணம் செய்து கொள்ள முறையாக என் தாயாரிடம் தீபாவளியன்று தனது விருப்பத்தைத் தெரிவித்து பெண் கேட்டு வந்த சமயம் என் தாயார் நமது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இவரை வீட்டிலிருந்து வெளியே தள்ளி விட்டு இரத்த காயங்களுடன் வீடு திரும்பி தீபாவளி கூட கொண்டாடாமல் புதுத் துணி உடுத்தாமல் ஊருக்குத் திரும்பி விட்டார் என்பதனை மறுநாள் தெரிந்து கொண்டேன். எனக்காக இவர் ஆசை ஆசையாக வாங்கியிருந்த புத்தாடைகளை நான் இவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே எனக்கு என் தாயார் மீது இருந்த அன்பு அப்படியே வெறுப்பாக மாறி விட்டது.
அதே போல இவர் என்னை திருமணம் செய்து கொள்ள முறையாக தெரிவித்து இவரது தந்தை மறுத்து விட்டார்.
இவரது தந்தை என்னை இவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்ட ஒரே காரணத்தால் இவரது தந்தையின் 60 வயது பூர்த்தி திருமணத்திலும் கலந்து கொள்ளவில்லை.
பெற்றோர் சொந்தமாக வாங்கிய வீட்டின் கிரஹப் பிரவேசத்திலும் கலந்து கொள்ளவில்லை. பெற்றோர் வீட்டிற்குச் செல்வதையும் நிறுத்திக் கொண்டார். என்னை விட அழகான படித்த பெண்களுடைய உறவுகளையெல்லாம் இவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனக்கு கட்டாய திருமணம் நடந்தது கூட தெரியாமல் என்னை பதிவுத் திருமணம் செய்து கொண்டு அழைத்து வர இங்கு வீடு பார்த்துக் கொண்டு இருந்த சமயம் மொட்டை மாடியிலிருந்து நான் இவரைப் பார்த்து அழைத்த பின்னர் தான் இவருக்கு எனது திருமண விஷயம் தெரிய வந்தது.
தீபாவளிக்கு இவர் வாங்கிய புத்தாடைகளை எனக்கு திருமணம் ஆன பின்னர் காணும் பொங்கல் அன்று என்னிடம் கொடுத்து இவரும் நானும் சேர்ந்து பாவாடை தாவணியுடன் சந்தோஷமாக உடுத்தி உண்மையான மாற்று தீபாவளி கொண்டாடினோம். என்னுடைய கட்டாயத் திருமணத்திற்குப் பின்னர் அன்று தான் முதல் முறையாக சந்தாஷப் பட்டேன்.
இவரது தாயாருக்கு நான் மருமகளாக வரவேண்டும் என்று நிறைய ஆசை. ஆனால் என்னுடைய தாயாரும் இவருடைய தந்தையும் மறுத்து விட்டார்கள். எனவே இவரது தாயார் எனக்குத் திருமணம் ஆன பின்னர் என் வீட்டிற்கு நேரில் வந்து என்னிடம் கேட்டுக் கொண்ட பின்னர் நான் சொன்னபடியால் தான் மீண்டும் இவரது வீட்டிற்குச் சென்று திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் சம்மதித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் நம்மிடையே உள்ள நெருக்கம் இன்று வரை கொஞ்சம் கூட குறையவில்லை.
நான் இவருடன் சேர்ந்து போகாத கோயில்கள் இல்லை வழிபடாத தெய்வங்கள் இல்லை. ஆனால் இவர் இன்று தான் இரண்டாவது முறையாக உன் முன்னிலையில் என்னைத் தொட்டு இருக்கின்றார். இன்று வரையில் எனக்கு பறக்கும் முத்தம் கூட இவர் கொடுத்ததில்லை. இது தான் நமது உண்மையான காதலின் புனிதம் என்று சொல்லி அவளது மருமகளை பரவசப் படுத்தி விட்டாள்.
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட என்னவளின் மருமகள் என்னுடைய நாத்தனார் உங்களை பாபா என்று அழைக்கும் போது நான் மட்டும் ஏன் உங்களை வாங்க போங்க என்று சொல்ல வேண்டும் என்று யோசித்து பார்த்தேன். எனது திருமணத்திற்குப் பின்னர் முதல் முறை வந்த சமயம் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் முதல் முறையாக என்னுடைய மாமியாருடன் ஒரு டம்ளர் காப்பியினை பகிர்ந்து பருகியதைக் கண்டதிலிருந்து உங்களை நான் என்னுடைய மாமனார் ஸ்தானத்தில் என் உள் மனதில் வைத்துள்ளேன். இருந்தாலும் நான் எதனையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இது வரை இருந்துள்ளேன் என்று சொல்லி விட்டு எனக்கு இப்போது உங்கள் இருவருடனும் சேர்ந்து காப்பி குடிக்க வேண்டும் போல் இருக்கின்றது என்று சொன்னாள்.
அதன் படி காப்பி குடித்து முடித்த சமயம் புது வீட்டிற்கு விரைவில் கிரஹப் பிரவேசம் செய்ய இருக்கின்றோம். அதில் கட்டாயம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். நீங்கள் இருவரும் சேர்ந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கூறினாள்.
அதற்கு என்னவள் நமக்குப் பிரியமான நமது மருமகள் உங்களை மிகவும் நம்புகிறாள் எனவே வருவீர்களா அல்லது வரமாட்டீர்களா என்று இப்போதே சொல்லி விடுங்கள். ஏனெனில் நீங்கள் வருவீர்கள் என்று ஏக்கத்துடன் காத்திருந்து வராமல் இருப்பது ஏமாற்றத்தை கொடுத்து விடும் என்று சொன்னாள்.
அதற்கு நான் எதனையும் மறைக்க விரும்பாமல் நானும் இவளும் நம் இருவர் குடும்பத்திலும் நிகழும் எந்த ஒரு விசேஷங்களிலும் கலந்து கொள்வதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டோம். ஆனால் அனைத்து நல்லது கெட்டதுகளையும் என்னுடைய ஆலோசனை இல்லாமல் இதுவரை உனது மாமியார் செய்தது இல்லை என்று சொன்னேன்.
உடனே என்னவள் அவளது மருமகளிடம் இவர் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் நான் கலந்து கொண்டாலோ அல்லது எனது வீட்டில் நடக்கும் விசேஷங்களில் இவர் கலந்து கொண்டாலோ நாம் இருவரும் முன்னின்று ஹோமத்தில் அமர்ந்து நடத்தி வைக்க முடியவில்லை என்னும் கவலை வந்து விடும் என்பதால் நான் முதல் முறை கர்ப்பிணியாக இருக்கும் சமயம் இவ்வாறு முடிவு எடுத்து விட்டோம்.
நேற்று நான் இவருடன் ஆட்டோவில் வரும் சமயம் சிறுவயதில் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு கல்யாண ஊர்வலத்தில் ஒரே வாகனத்தில் செல்லும் பாக்கியம் கிடைக்காததால் வாழ்க்கை முழுவதும் ஏங்கி கஷ்டப்பட வேண்டி இருக்கின்றது என்று சொன்னேன் என்று எதனையும் மறைக்காமல் சொன்னாள்.
உனது நாத்தனார் திருமணத்தின் போது உன்னுடைய மாமனார் உயிருடன் இருந்த போதிலும் இவர் வந்த சமயம் தான் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. இவர் கொண்டு வந்த இனிப்புகளை வைத்துத் தான் ஜாதகத்தினை பூஜை செய்து தரகரிடம் கொடுத்தோம். உன் மாமனார் இவரிடம் ஆலோசித்து இவர் சொன்னபடி தான் மாப்பிள்ளையை தேர்வு செய்தார். முதல் மகன் காதல் விஷயத்தை என்னை இவர் காதலித்த அனுபவங்களைக் கொண்டு கண்டுபிடித்து முதல் மகன் மாமனார் இவரது நண்பராக இருந்ததால் அந்த வீட்டிற்குச் சென்று பேசி முடித்து வைத்தார். அதே போல உன்னுடைய திருமணத்திற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்தார். ஆனால் இது வரை இவர் எந்த விசேஷங்களிலும் கலந்து கொண்டதில்லை.
இப்போது கூட வீடு கட்டுவதற்கு திருப்பதிக்குச் சென்று எவ்வாறு வழிபட வேண்டும் என்று சொல்லிய பின்னர் நீயும் நானும் உன் கணவரும் உன் தாயாரும் திருப்பதிக்கு சென்று வந்த பின்னர் தான் வீடு கட்ட முடிந்தது.
எல்லாவற்றையும் செய்வதற்கு எனக்கு ஆலோசனை வழங்குவார். ஆனால் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். எனவே புது வீடு கிரஹப்பிரவேசத்திற்கு அழைக்க வேண்டியது நமது கடமை. ஆனால் விசேஷம் முடிந்த பின்னர் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து தான் வருவார் என்பது எனக்கு மட்டும் தெரிந்த உண்மை.
இன்று என்னமோ தெரியவில்லை நம் மீது உள்ள தனிப்பட்ட பாசத்தின் காரணமாக நேற்று நான் மயக்கம் தெளியும் வரை இருக்கலாமே என்று கேட்டுக் கொண்டதற்கு உறவினர்கள் வரும் சமயம் நான் இங்கே இருப்பது நல்லதல்ல என்று கூறிச் சென்று விட்டு மறுநாளே அதாவது இன்று மீண்டும் வந்துள்ளார். எனக்கு ஓரே ஆச்சர்யம் அதே நேரத்தில் பன்மடங்கு சந்தோஷம் என்று சொன்னாள்.
நான் என்னவளிடம் புது வீடு சென்ற பின்னர் உனது சம்மந்தியும் கூட இருக்கப் போவதால் நாம் இருவரும் முன்பு போல சகஜமாக நெருக்கத்துடன் இருக்க முடியாதது என்பதாலும் முன்பு போல மனம் விட்டுப் பேச முடியாது என்பதாலும் என்னுடைய வருகை குறையும் என்று தெரிவித்தேன்.
என்னவளின் மருமகள் கிரஹப் பிரவேசம் முடிந்தவுடன் கட்டாயம் வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமயம் அவளது வளர்ப்புத் தாயார் வந்து சேர்ந்தார்கள்
அதன் பின்னர் சற்று நேரம் உரையாடி விட்டு நான் அனைவரிடமும் பிரியா விடைபெற்று மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டேன்.
அதற்கு நான் உன்னை பார்க்க வரவே மாட்டேன் என்று சொல்லவில்லை. அடிக்கடி வருவது குறையும் என்று தான் சொன்னேன். ஏனெனில் உன்னுடைய மருமகளின் வளர்ப்புத் தாயார் கூடவே புதிய வீட்டில் இருக்கப் போவதால் நாம் இதுவரையில் பேசி வந்தது போல தனிமை கிடைக்கப் போவதில்லை. அதனால் முன்பு போல சரளமாகப் பேச முடியாது என்பதனைச் சொன்னேன்.
அதனை அவள் ஏற்க மறுத்து நீங்கள் என்னுடன் தனிமையில் பேசாவிட்டாலும் பரவாயில்லை. கட்டாயம் என்னைப் பார்க்க வந்து சென்றால் போதும். ஏனெனில் உங்களைப் பார்க்காமல் என்னால் ஆறு மாங்களுக்கு மேல் இருக்க முடியாது என்று சொல்லி விட்டு நான் ஆட்டோவில் ஏறும் வரை காத்திருந்து மிகுந்த சோகத்துடன் வழியனுப்பி வைத்தாள்.
கட்டாயம் வருடத்திற்கு இரு முறையாவது வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
என்னவள் என்னால் எனக்காக எப்போதும்
ஏங்கக் கூடாது எனும் பொருட்டு
வருகின்றேனென ஒப்புக் கொண்டேன் உளமாற
ஏங்கக் கூடாது எனும் பொருட்டு
வருகின்றேனென ஒப்புக் கொண்டேன் உளமாற
என்னவள் உதட்டினில் ஒரு சிரிப்பு
அது போதும் என் நினைவில் நீங்காமல் இருப்பதற்கு
அது போதும் என் நினைவில் நீங்காமல் இருப்பதற்கு