முதல் சம்மதம்.
நான் கேட்கப்போகும் கேள்விக்கு மிகச் சரியான பதிலை 3 நிமிடங்களில் சொல்லிவிட்டால் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கத் தயார்.
கேள்வி
நான்> எங்கம்மா உன் மாமியார்> எங்கப்பா உன் மாமனார்> உங்கம்மா என் மாமியார்> என் தம்பி உன் கொழுந்தன்> நீ> உங்கக்கா என் மைத்துனி> எல்லோரும் சேர்ந்து சினிமாவுக்கு போக மொத்தம் எத்தனை டிக்கட் எடுக்க வேண்டும்.
பதில்
மொத்தம் 7
எப்படி
நீங்கள் நான் சேர்ந்து இரண்டு பேர். உங்கப்பா உங்கம்மா உங்கள் தம்பி எங்கம்மா எங்கக்கா 5 பேர். ஆக மொத்தம் 7 சரிதானே
கேள்வி
அப்படின்னா எங்கம்மா உனக்கு மாமியார், உங்கம்மா எனக்கு மாமியார்> என் தம்பி உன் கொழுந்தன்> உன் அக்கா என் மைத்துனி> என்றால் நீயும் நானும் என்ன உறவு?
பதில்
நான் சொன்ன பதில் சரியாக இருக்கின்றதா? அப்படியானால் நான் உங்களுக்கு மனைவி நீங்கள் எனக்கு கணவர் . ஆனால் தற்போது காதலர்கள்.
கேள்வி
நீ என்னை விரும்புகிறாயா இல்லையா எனது விருப்பம் ஒருதலைப் பட்சமாக இருக்குமா என்ற சந்தேகத்திலேயே நான் கேட்டேன்
பதில்
நான் உங்களை விரும்புகிறேன் நமது இருவர் மனதிலும் ஒரே எண்ணம் அலை மோதுகின்றது. எனவே எனக்கு உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்பதனை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன்