முதல் ஸ்பரிசம்
இத்தனை நாட்களாக நாம் பேசி வருகின்றோம் ஆனால் ஒரு முன்னோட்டமோ அல்லது ஒரு வெள்ளோட்டமோ இல்லாமல் இருந்தால் எப்படி?
அதுவரை எதேனும் ஒரு இடத்தில் நமது ஸ்பரிச உணர்வு எப்படியிருக்கின்றது எனப் பார்க்கலாமே.
அப்படியானால் எனது சுண்டுவிரலை மாத்திரம் தொட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டால் திருமணத்தின் போது உங்களது சுண்டு விரலால் எனது சுண்டு விரலைப் பிடித்து அக்கினி வலம் வரும் சமயம் பழகிப்போன உணர்ச்சியாக இருக்கும். எனவே சுண்டு விரலைத் தொட வேண்டாம்.
மோதிர விரலை தொட்டால் திருமணத்தின் போது நீங்கள் மோதிரம் அணிவிக்கும் சமயம் புத்துணர்ச்சி ஏற்படாது எனவே மோதிர விரலைத் தொட வேண்டாம்.
நடு விரலில் மோதிரம் போட்டால் தாய் மாமனுக்கு ஆகாது என்பார்கள் எனவே எனது நடுவிரலை உங்களது விரலால் தொட்டு அதனால் நமது தாய்மாமன்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து நமது திருமணம் தடைப்பட்டு விடக்கூடாது எனவே நடு விரலைத் தொட வேண்டாம்.
கட்டை விரலில் சரியான உணர்வுகள் இருக்காது எனவே இருவருக்கும் நினைவில் நிற்கும் படி அமையாது.
நான் உங்கள் மனைவி என்று நீங்கள் என்னை அறிமுகப்படுத்தவும் நீங்கள் என் கணவனர் என்று நான் உங்களை அறிமுகப்படுத்தவும் வருங்காலத்தில் சுட்டிக் காட்டவிருக்கும் விரல் ஆள்காட்டி விரல் எனவே உங்களது ஆள்காட்டி விரலால் எனது ஆள்காட்டி விரலை தொடலாம். ஆனால் சாதாரணமாக எல்லோரும் தொடுவது போல இல்லாமல் எப்போதும் பேசும் படியாக ஒரு செய்கை இருக்க வேண்டும் எனவே எனது ஆள்காட்டி விரலை உங்களது ஆள்காட்டி விரலால் எப்போது தொடுவது எனத் தீர்மானித்து ஒரு நல்ல நாள் பார்த்து என்னைத் தொடுங்கள். எனக்கு பூரண சம்மதம்.
இன்று வளர்பிறை சுபமுகூர்த்த நாள் இப்போது நல்ல நேரம் நான் உன்னைத் தொடவா நீ என்னைத் தொடுகிறாயா?
நான் உங்கள் கரம் பற்றி வாழப் போவதால் நான் உங்களைத் தொடுவது நான் சரி.
அப்படியானால் ஒரே விரலால் எனது விரலை மடக்க வேண்டும் தயாரா?
நீங்கள் ஒரு ஆண் என்னை விட உங்களுக்கு பலம் அதிகம் அப்படியிருக்கையில் உங்கள் விரலை விரைப்பாக வைத்துக்கொண்டால் என்னால் எப்படி மடக்க முடியும்
சரி நான் எனது விரலை விரைப்பாக இல்லாமல் சாதாரணமாக வைத்துக்கொள்கிறேன் உன் விரலால் என் விரலை மடக்கு.
என்னால் முடியவில்லை
சரி நான் உன் விரலை எனது விரலால் மடக்குகிறேன் எனக்கூறி எனது ஆள்காட்டி விரலை அவளது ஆள்காட்டி விரலின் மீது வைத்து எனது விரலை மடக்க அந்த பிஞ்சு இளம் விரல் மடங்கி விட்டது. எப்படி எனது ஐடியா?
ஐடியா சரிதான் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எனது ஆள் காட்டி விரலை உங்களது ஆள்காட்டி விரலால் தொட்டு புனிதத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.. எனவே எனது விரலை முதன் முதலாக தொடுவதற்கு எந்த விரல் பயன்படுத்தப் பட்டதோ அந்த விரலால் பிறர் தவறு என்று சொல்லக் கூடிய காரியம் எதனையும் செய்யக் கூடாது. தவறு என்று பெரியோர்கள் ஒதுக்கும் பொருட்களை தொடக்கூடாது நான் அப்படியே இருப்பேன் சரியா.
சரி சத்தியம் செய்யட்டுமா வேண்டாம் உங்களது உள்ளங்கை எனது உள்ளங்கையை திருமணத்திற்குப் பின்னர் தான் பிடிக்க வேண்டும் அது வரை இது போதும்.
(எந்த விரலால் அவளது விரலைத் தொட்டேனோ அந்த விரல் சிகரட் வைப்பதற்கு ஸ்டாண்ட் போல பயன் படும் அதாவது ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே தான் சிகரட் வைத்து புகை பிடிக்க வேண்டும். அந்த விரலுக்கு நான் அவளைத் தொட்டதன் மூலம் புனிதம் கொடுத்து விட்டதால் சிகரட் கூட தொடுவதில்லை என்று திடமான நிரந்தரமான முடிவெடுத்துவிட்டேன். அதனால் எனக்கு சிகரட் பிடிக்கும் பழக்கம் ஏற்படவேயில்லை.)