WELCOME நல்வரவு स्वागत हे
Welcome to my "myloverismyangel.blogspot.com"
R.R.JAGADEESAN R.R.ஜெகதீசன் R.R.जगदीसन
Visit my another blogspot about GST Taxation "abhivirthi.blogspot.com" Visit my another blogspot about Love Story of intimate lovers "https://intimacyofmylove.blogspot.com/" Visit my another blogspot about GST Taxation "geeyestee.blogspot.com" Visit my another blogspot about Marriage Delay Remedy Solution Pooja at Home "marriagepooja.blogspot.com" Visit my another blogspot about Latest Inventions in Ancient Days "identicalinventions.blogspot.com" THANK YOU VERY MUCH FOR YOUR VISIT AND BOOKMARKING THIS BLOGSPOT FOR FREQUENT VISITS. SHARE THE ARTICLES WITH YOUR COLLEAGUES AND FRIENDS. TO VIEW MORE ARTICLES PLEASE VISIT AGAIN AND AGAIN. R.R. JAGADEESAN-----தாங்கள் இந்த வலைப்பதிவினை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. வலைப் பதிவு மற்றும் வலைப்பதிவிலுள்ள தகவல்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். வலைப்பதிவினை மீண்டும் பார்வையிட கனிவான வேண்டுகோள். வருக வருக. மீண்டும் மீண்டும் வருக வருக.. ஆர். ஆர். ஜெகதீசன்
CLICK THE LINK BELOW TO VIEW "MY LOVER IS MY ANGEL" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "என் காதலி என் தேவதை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
1. First Love Acceptance : முதல் சம்மதம் 2. First Touch : முதல் ஸ்பரிசம் 3. I belongs to you, You belongs to me, The city belongs to us : நான் உனக்கு சொந்தம். நீ எனக்கு சொந்தம். ஊரே நமக்கு சொந்தம் 4. First Love Gift : முதலாவது பரிசு 5. First Prayer : முதலாவது வழிபாடு 6. Prayer for Child : குழந்தை பாக்கியம் 7. Elder Blessings : உறவினர் நல்லாசி 8. Our first sadness : எங்களது முதல் சோகம் 9. First joint marriage discussion with my angel : முதலாவது திருமண கலந்தாய்வு (அவளும் நானும் சேர்ந்து) 10. Joint Prayer by us : இருவர் வழிபாடு 11. First marriage discussion with parents : முதலாவது திருமண கலந்தாய்வு (எனது பெற்றோர்களுடன்) 12. First marriage discussion with her mom : முதலாவது திருமண கலந்தாய்வு (அவளது தாயாருடன்) 13. My loss of my angel : என் தேவதையின் பிரிவு 14. First happiness after her marriage : திருமணத்திற்குப் பின்னர் அவளது முதல் சந்தோஷம் 15. Choosing name for child before birth : குழந்தைக்குப் பெயர் தேடல் 16. My mother's sadness and happiness : என் தாயாரின் வருத்தமும் சந்தோஷமும் 17. Not participating any functions or celebrations : எந்த ஒரு விசேஷங்களிலும் கலந்து கொள்ளாமை 18. First Female Child : முதலாவது பெண் குழந்தை 19. Little angel to my angel : தேவதைக்கு ஒரு குட்டி தேவதை 20. Bride Search : பெண் பார்க்கும் படலம் 21. Parents Own House : பெற்றோர் சொந்த வீடு 22. Joyful meeting : சந்தோஷமான சந்திப்பு 23. My Angel's Appreciation : என் தேவதையின் பாராட்டுதல்கள் 24. Bride Search Discussion : பெண் பார்ப்பதற்கு முன் ஒரு கலந்துரையாடல் 25. Marriage Invitation : திருமண அழைப்பு 26. House Warming : வீடு பார்த்துக் குடியேறுதல் 27. Happiness and Unhappiness of us : அளவுக்கு அதிகமான சந்தோஷம் மற்றும் சோகம் 28. Planning for Future : எதிர் காலத்தைப் பற்றி திட்டமிடல் 29. Marriage arrangements to my Little Angel : குட்டி தேவதைக்கு திருமண ஏற்பாடுகள் 30. Demise of Angel's Spouse : தேவதையின் கணவர் மறைவு 31. Love Marriage of My Angel's son : தேவதையின் மகனுக்கு காதல் திருமணம் 32. Same thought in both hearts : இரண்டு இதயங்களுக்குள் ஒரே எண்ணம் ஒரே சிந்தனை 33. Financial Crisis and its remedies in families : குடும்பத்தில் ஏற்படும் பணக் கஷ்டமும் அதற்கான நிவர்த்தியும் 34. Marriage Delays and its remedies : திருமணத் தடைகளும் அவற்றிற்கான பரிகாரங்களும் 35. Prayers for purchase of own house property : சொந்த வீடு வாங்கும் பாக்கியம் பெற செய்ய வேண்டிய வழிபாடுகள் 36. Loneliness in Palace : அரண்மனையில் தனிமை - கடல் கடந்த நாடுகளில் வாழ்வோரின் பெற்றோர் நிலை 37. House Construction Work : வீடு கட்டும் பணிகள் 38. Happiness Again : மீண்டும் ஒரு சந்தோஷம் 39. Meeting for Long Duration goodbye : நீண்ட நாட்களுக்கு பிரியா விடை சந்திப்பு
CLICK THE LINK BELOW TO VIEW "LOVE STORY" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "காதல் கதை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
01. Nostalgia for my lover's absence : என்னைக் காண என் காதலர் வராத ஏக்கம் 02. First Introduction : முதல் அறிமுகம் 03. First desire : முதல் விருப்பம் 04. First Word : முதல் வார்த்தை 05. First Day Game : முதல் நாள் விளையாட்டு 06. First Day Game continuity : முதல் நாள் விளையாட்டு தொடர்ச்சி 07. Lonelyness due to opening of Schools : பள்ளிகள் திறந்தமையால் தனிமை 08. Evening Classes : மாலை வகுப்புகள் 09. First meet with his Mom : முதன் முறையாக அவரது தாயாரை சந்தித்தது 10. First time prayer with his mom in temple : முதன் முறையாக அவரது தாயாருடன் கோயிலில் வழிபாடு 11. First expression of expectations : எதிர்பார்ப்புகளின் முதல் வெளிப்பாடு 12. First acceptance from mom : தாயாரின் முதல் சம்மதம் 13. Future dreams : எதிர் காலக் கனவுகள் 14. One about another : ஒருவரைப் பற்றி மற்றொருவர் 15. First cooking : முதல் சமையல் 16. Success in School Examination : பள்ளித் தேர்வில் வெற்றி 17. First Tour : முதல் சுற்றுலா 18. Pilgrimage First Day : புனித யாத்திரை முதல் நாள். 19. Pilgrimage Second Day : புனித யாத்திரை இரண்டாம் நாள் 20. Pilgrimage Third Day : புனித யாத்திரை மூன்றாம் நாள் 21. Pilgrimage Fourth Day : புனித யாத்திரை நான்காம் நாள் 22. Distribution of Temple Prasadams : கோயில் பிரசாதங்கள் விநியோகம் 23. First Acceptance and First Touch : முதல் சம்மதம் மற்றும் முதல் ஸ்பரிசம் 24. First Advise and Birth Day Gift : முதலாவது அறிவுறை மற்றும் பிறந்த நாள் பரிசு 25. Relationship Strengthened : உறவு வலுவடைந்தது 26. Deep Prayers : ஆழமான பிரார்த்தனை 27. Government Job : அரசாங்க வேலை 28. Isolation Again : மீண்டும் தனிமை 29. Anger on Father : தந்தை மீது கோபம் 30. Wait and Watch : எதிர் பார்த்துக் காத்திருத்தல் 31. My Thoughts Before Sleeping : தூங்குவதற்கு முன் எனது எண்ணங்கள் 32. Expectation and Disappointment : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் 33. Meet Again : மறுபடியும் சந்தித்தல் 34. Second Joyful Meet : இரண்டாவது மகிழ்ச்சியான சந்திப்பு 35. Remembrance of Past Periods : கடந்த காலங்களின் நினைவு 36. Lack of Courage or Cowardness : தைரியம் இல்லாமையா அல்லது கோழைத் தனமா? 37. Birth Day and Searching Name for Child : பிறந்த நாள் மற்றும் குழந்தைக்குப் பெயர் தேடல் 38. Visit of His Mom : அவரது தாயார் வருகை 39. Seemantham or Bangle Ceremony during Pregnancy : வளைகாப்பு 40. Child Delivery between Train Journey : இரயிலில் பயணத்தின் இடையே குழந்தை பிரசவம் 41. Future Plans not Fulfilled : எதிர் காலத் திட்டங்கள் நிறைவேறவில்லை 42. Frustration in Life : வாழ்க்கையில் விரக்தி 43. First Meet After Delivery : பிரசவத்திற்குப் பின் முதல் சந்திப்பு 44. Bride Search : மணமகள் தேடல் 45. Bride Search Difficulties : மணமகள் தேடலில் சிரமங்கள் 46. Long Conversation without Tears : கண்ணீர் இல்லாமல் நீண்ட உரையாடல் 48. Counselling for choosing Right Bride : சரியான மணமகள் தேர்வு செய்ய ஆலோசனை 49. Normal Conversation : சாதாரண உரையாடல் 50. Going to Home for Surgery : அறுவை சிகிச்சைக்கு சொந்த ஊர் செல்லுதல் 51. Return to Work Place after Surgery : அறுவை சிசிச்சைக்குப் பின் பணியிடம் திரும்புதல் 52. Secret of Daughter's Name and Bride Search : மகளின் பெயர் ரகசியம் மற்றும் வரன் பார்த்தல் 53. Unexpected Conversation : எதிர்பாராத உரையாடல் 54. Jasmine Flower Strings and Wheat Halwa : மல்லிகை பூவும் ஹல்வாவும் 55. Mother's House ; அன்னை இல்லம் 56. Final Conclusion in Bride search : மண மகள் தேடலில் இறுதி முடிவு 57. Betrothal : நிச்சயதார்த்தம் 58. Again Nostalgia : மீண்டும் ஏக்கம் 59. Conversation without satisfaction : திருப்தி இல்லாமல் உரையாடல் 60. Conversation about Love Failure with my relative : என் உறவினருடன் காதல் தோல்வி பற்றிய உரையாடல் 61. Wedding Invitation : திருமண அழைப்பிதழ் 62. Anxiety like Loss< : இழப்பு போன்ற கவலை 63. Last meeting with him before his marriage : திருமணத்திற்கு முன் அவருடன் கடைசி சந்திப்பு 64. Valentine's Wedding is Intolerate Tragedy : காதலர் திருமணம் என்பது தாங்க முடியாத சோகம் 65. First Meet After Marriage : திருமணத்திற்குப் பின்னர் முதல் சந்திப்பு 66. Intimacy of his mother with me : என்னுடன் அவரது தாயாரின் நெருக்கம் 67. Even After Marriage Saree Gift : திருமணத்திற்குப் பின்னரும் கூட சேலை பரிசு 68. Wedding Gift : திருமணப் பரிசு 69. Doubt Spoils Happiness : சந்தோஷத்தைக் கெடுக்கும் சந்தேகம் 70. What Will be the Next? : அடுத்தது என்னவாக இருக்கும்? 71. Late and Hasty Decisions will Spoil the Future ; தாமதமான மற்றும் அவசர முடிவுகள் எதிர்காலத்தை கெடுக்கும். 72. Feelings Like Loneliness : தனிமை போன்ற உணர்வுகள் 74. Double Happyness ; இரட்டிப்பு சந்தோஷம் 75. Pongal Festival : பொங்கல் பண்டிகை 76. Intimate Relationship : நெருக்கமான உறவு 77. Wrong Decisions due to Overconfidence : அதிக நம்பிக்கையினால் தவறான முடிவுகள் 78. Life without Interest : ஆர்வம் இல்லாத வாழ்க்கை 79. Last Deepawali Gift : கடைசி தீபாவளிப் பரிசு 80. Unbearable Tragedy : தாங்க முடியாத சோகம் 81. Unforgettable Memories : மறக்க முடியாத நினைவுகள். 82. Marriage Arrangements to Daughter : மகளுக்கு திருமண ஏற்பாடுகள் 83. Daughters' Marriages and Ill-health : மகள்களின் திருமணங்கள் மற்றும் உடல் நலக் குறைவு 84. Hard Times for Both : இருவருக்கும் கடினமான காலம் 85. How to Prevent Loss in Business? : வணிகத்தில் இழப்பைத் தடுப்பது எப்படி? 86. Invisible Companion : கண்ணுக்குத் தெரியாத துணை 87. How to Choose a Life Partner? : வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி? 88. Mutual Exchange of Happenings : நிகழ்வுகளின் பரஸ்பர பரிமாற்றம். 89. The Glory of the Temple Steps : கோவில் படிகளின் மகிமை 91. Temples, Churches, Mosques and Places of Worship : கோவில்களும் ஆலயங்களும் பள்ளிவாசல்களும் வழிபாட்டுத் தலங்களும் 92. Homams and Yagams : ஹோமங்களும் யாகங்களும் 93. Conversation about the marriage of the son : மகனின் திருமணம் பற்றிய உரையாடல் 94. Son's Marriage : மகனின் திருமணம் 95. Decrease of Intimacy due to Family Members : குடும்ப உறுப்பினர்கள் காரணமாக நெருக்கம் குறைதல் 96. His Arrival is Expected : அவரது வருகை எதிர்பார்க்கப் படுகின்றது 97. Labor Pain and Abdominal Pain : பிரசவ வலியும் வயிற்று (பொய்) வலியும் 98. Minimizing Frequent Visits : அடிக்கடி வருகைகளைக் குறைத்தல் 99. Conversation After Long Interval : நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உரையாடல் LAST ARTICLE. Bamboos Used During Construction : முட்டுக் கொடுத்த மூங்கில்கள்
CLICK THE LINK BELOW TO VIEW "DESIRED LIFE AND REAL LIFE" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "விரும்பிய வாழ்க்கை மற்றும் நிஜ வாழ்க்கை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
001. Schoolmate : பள்ளித் தோழி 002. Schoolmate : பள்ளித் தோழன் 003. Grandmothers' Affection : ஆச்சிகளின் பாசம் 004. Six to Sixty Years : ஆறு முதல் அறுபது வரை 005. You too late : நீங்கள் மிகவும் தாமதம் 006. Job Opportunity during Flight Travel : விமான பயணத்தின் போது வேலை வாய்ப்பு 007. Familiar Voice : பரிட்சயமான குரல் 008. Stock Trading and Share Market : பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை 009. Love Memories : காதல் நினைவுகள். 010. Divorce Withdrawal : விவாகரத்து திரும்பப் பெறுதல் 011. Marriage Blessings From God : கடவுளிடமிருந்து திருமண ஆசீர்வாதம் 012. Betel Garland and Vadai Garland : வெற்றிலை மாலையும் வடை மாலையும் 013. King and Queen Plate : ராஜா ராணி தட்டு 014. Alimony : ஜீவனாம்சம் 015. Two Solutions for the Same Problems (Solution-1) : ஒரே பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள். (தீர்வு-1) 016. Two Solutions for the Same Problem (Solution-2) : ஒரே பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள். (தீர்வு-2) 017. Love because of Misunderstanding : தவறான புரிதலின் காரணமாக காதல் 018. Bliss is Rapture : பேரின்பம் பேரானந்தம். 019. First Love is Mightgier than all Relations : அனைத்து உறவுகளையும் விட முதல் காதல் வலிமையானது 020. Astrology Succeeded : ஜோதிடம் வெற்றி பெற்றது 021. Unforgetable Memories : மறக்க முடியாத நினைவுகள் 022. Actual Life and Imagination Life : உண்மையான வாழ்க்கை மற்றும் கற்பனை வாழ்க்கை 023. House Warming Ceremony : கிரஹப் பிரவேசம் 024. Anxiety and Happiness : கவலையும் மகிழ்ச்சியும் 025. Unexpected Betrothal and Sudden Marriage : எதிர்பாராத நிச்சயதார்த்தம் மற்றும் திடீர் திருமணம். 026. Kunkumam Casket : குங்குமச் சிமிழ் 027. The Glory of the Lamps : விளக்குகளின் மகிமை 028. The Heart Never Forgets : நெஞ்சம் மறப்பதில்லை 029. Unstable Income : நிலையில்லா வருமானம். 30. Job Looking Foil : வேலை தேடும் படலம்

ஞாயிறு, 8 ஜூலை, 2018

Meeting for Long Duration goodbye : நீண்ட நாட்களுக்கு பிரியா விடை சந்திப்பு

நீண்ட நாட்களுக்கு பிரியா விடை சந்திப்பு


https://myloverismyangel.blogspot.com/2018/07/meeting-for-long-duration-send-off.html


என்னவளின் மருமகளுக்கு மயக்கம் தெளியும் வரையிலாவது இருந்து பின்னர் திரும்பிச் செல்லலாமே என்று என்னவள் சொன்னது மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. நான் சென்ற வேலை முடியவில்லை எனவே மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.

மறு நாள் காலையில் என் அலுவல் தொடர்பான பணிகளை முடித்து விட்டு பிற்பகலில் நேரடியாக மருத்துவ மனைக்கே சென்று விட்டேன்.

அங்கு என்னவளும் என்னவளது மருமகளும் மாத்திரம் இருந்தார்கள். என்னவளிடம் மருமகளின் வளர்ப்புத் தாயார் பற்றி விசாரித்த சமயம் நேற்று குழந்தை பிறந்ததிலிருந்து இங்கேயே தங்கி விட்டு தற்போது தான் வீட்டிற்குப் போயிருக்கின்றார்கள். நான் வீட்டிலேயே நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மருமகளை நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொன்னதற்கு என்னால் அவ்வாறு இருக்க முடியாது. எனது பேத்திக்கு அருகிலேயே இருக்கக் கூடிய அளவுக்கு எனக்கு இளமை திரும்பி விட்டது என்று சந்தோஷமாக  இருக்கின்றார்கள்.

இவ்வாறான சந்தோஷம் எனக்கு வாழ்க்கையில் முதல் முறையாகக் கிடைத்து இருக்கின்றது எனச் சொல்லி வீட்டிற்குப் போய் சீக்கிரம் குளித்து விட்டு உடனே சாப்பிட்டு விட்டு மீண்டும் இங்கு வந்து விடுவேன். மருத்துவ மனையிலிருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரையில் நான் தான் மருத்துவ மனையில் இருப்பேன். வீட்டிற்கு அழைத்து வந்த பின்னரும் குழந்தையை நான் தான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லி விட்டு சென்றுள்ளார்கள் என்று தெரிவித்தாள்.

அதன் பின்னர் மருமகளுக்கு எப்போது மயக்கம் தெளிந்தது என்று கேட்டதற்கு இரவு சுமார் பதினோரு மணிக்குத் தான் மயக்கம் தெளிந்தது என்றும் குழந்தையைப் பார்க்க வர வேண்டிய உறவினர்கள் அனைவரும் வந்து சென்று விட்டார்கள் எனவும் சொல்லி நீங்கள் உறவினர்களைப் பற்றி கவலைப்படாமல் இங்கேயே என்னுடனும் என்னுடைய மருமகளுடனும் தாராளமாக இருக்கலாம் என்றும் சொன்னாள்.

உடனே என்னவளின் மருமகள் நீங்கள் வந்திருப்பது தெரிந்ததும் என்னுடைய அம்மாவிடம் சொல்லி உங்களை இங்கு வரவழைத்தேன். நான் என்ன சொன்னேனோ அதே வார்த்தைகளை அப்படியே என் அம்மா சொல்லித்தான் நீங்கள் நேற்று வந்தீர்கள் என்றும் அதன் பின்னர் நடந்தவைகள் அனைத்தையும் அவளது வளர்ப்புத் தாயார் நினைவு படுத்திக் கூறி மிகவும் சந்தோஷப் பட்டார்கள் என்றும் தெரிவித்தாள். 

நாங்கள் மூவரும் ஒரே டம்ளர் காப்பியை பகிர்ந்து குடித்ததையும்  எனது மாமியாருடன் சேர்ந்து எனது நெற்றியில் பொட்டு வைத்து ஆசீர்வதித்த இரண்டு மணி நேரத்தில்  எனக்கு சுகப்பிரசவம் ஆனதையும் குழந்தையை நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் முத்தமிட்டதையும் சொல்லி மிகவும் உணர்ச்சி வசப்பட்ட போது  அவர்களின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தேன் என்று சொன்னவுடன் என்னவள் உனது நாத்தனாருக்கும் நாம் இருவரும் ஒரே நேரத்தில் இரண்டு காதுகளில் மூன்று முறை விஜி என்று சொல்லி பெயர் வைத்தோம் என்பதனை சந்தோஷத்துடன் தெரிவித்தாள்.

உங்கள் இருவருக்கிடையே உள்ள உண்மையான அன்பும் அக்கரையும் பாசமும் நெருக்கமும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது. எனவே தான் உங்களுடன் சேர்ந்து காப்பி குடித்து விட்டு ஆசீர்வதிக்கச் சொன்னேன். நீங்கள் இருவரும் சேர்ந்து அவ்வாறு செய்த ஒரே காரணத்தால் தான் இன்னும் ஒரு வார காலத்தில் குழந்தை பிறக்கும் என்று சொன்ன டாக்டர்களே ஆச்சர்யப்படும் வகையில் நேற்றே எனக்கு சுகப்பிரசவம் ஆகி குழந்தை பிறந்து விட்டது என்று மன நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.  

எனக்கு தாய் தந்தை இருவரும் கிடையாது. என்னுடைய வளர்ப்புத் தாயார் என்னிடம் எவ்வளவு தான் அன்பாகவும் பாசமாகவும் இருந்தாலும் தமது உறவுகள் அதாவது மகன்கள் மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள் வந்து விட்டால் அவர்களுக்கு முன்னர் என் மீது அன்பினை வெளிக் காட்ட முடியாமல் தவிப்பார்கள்.



https://myloverismyangel.blogspot.com/2018/07/meeting-for-long-duration-send-off.html


ஆனால் உங்கள் உறவு எப்படியெனில் "சொந்தமில்லாத சொந்தங்கள்" என்பது போல.

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருக்கும் ஆனால் அந்த தாமரை இலையினை தண்ணீரிலிருந்து எடுத்து விட்டால் தண்ணீரிலிருந்து பிரிந்த காரணத்தால் அந்த தாமரை இலை வாடி விடும். 

அது போல உங்கள் இருவரின் உறவு நிலை மிகவும் நெருக்கமாக ஆனால் வெளியில் தெரியாமல்  இருக்கின்றது. இரண்டு பேருக்கும் இடையே இருந்த உண்மையான காதல் வெற்றியடையாத போதிலும்  இத்தனை வருடங்கள் வரையில் ஒருவரை ஒருவர் மறந்து விடாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல்.  ஒருவர் மீது மற்றொருவர் அக்கரை செலுத்துவது குறையாமல் இணை பிரியாத அன்புடன். பாசத்துடன் ஒற்றுமையாக இருப்பது என்பது பூர்வ ஜென்ம பந்தம். இது ஆண்டவன் போட்ட முடிச்சு. அது எனக்கு மிகவும் பிடித்து  இருக்கின்றது. இவ்வாறான உறவுகள் இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று  சொன்னாள்.

உடனே என்னவள் உன்னுடைய திருமணத்திற்குப் பின்னர் நம்முடைய வீட்டிற்கு இவர் வந்த சமயம் சாப்பிட்டு முடித்தவுடன் வெற்றிலை பாக்கு வாங்கி வரட்டுமா அல்லது பீடா வாங்கி வரட்டுமா என்று கேட்டதற்கு இவருக்கு வெற்றிலை பாக்கு பீடி சிகரட் மது போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது என்று சொன்னேன்.  அதற்கு காரணம் கேட்ட சமயம் நான் சொல்லவில்லை.

இப்போது சொல்கின்றேன்.  நான் இவரைக் காதலிக்கும் சமயம் ஒரே ஒரு முறை எனது ஆள்காட்டி விரலை அதே காம்பவுண்டில் குடியிருந்த நம் இருவருக்கும் நெருங்கிய தோழியர் இருவர் முன்னிலையில்  இவர் தொட்ட  ஒரே காரணத்தால் எனக்கு பிறர் தவறு என்று சொல்லும் எந்தப் பொருட்களையும் என் விரல் பட்ட கைகளால்  நான் தொட மாட்டேன் என்று  சத்தியம் செய்து கொடுத்து விட்டு அதனை இன்று வரை கடைப்பிடிக்கின்றார்.  

என்னை இவர் காதலித்த சமயம் முதன் முதலாக என்னுடைய ஆள்காட்டி விரலைத் தொட்ட போது இவர் சொன்ன வார்த்தைகள் ஆறு ஆண்டுகள் கழித்து எனது திருமணத்திற்குப் பின்னர் வெளியான  வசந்த மாளிகை படத்தில் வரும் ஒரு பாட்டில் "அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்" என்று வரும். அந்த பாடலின் வரிகளைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இன்று வரையில் காப்பாற்றுகின்ற இவரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என்று நினைத்து ஏங்கி தவித்து எந்த நேரத்திலும் என்னைச் சுற்றி யார் இருந்தாலும் எனனையும்  மறந்து  நான் அழ ஆரம்பித்து விடுவேன் என்று கூறிய சமயம் அவள் கண்ணீர் விட  ஆரம்பித்து விட்டாள். 

ஆனால் என்னை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து  திடீரென கட்டாயத் திருமணம் செய்து கொண்ட உனது மாமனார் எப்போதும் மது போதையில் தான் இருப்பார். வாயில் எப்போதும் பாக்கு இருந்து கொண்டே இருக்கும்.  எனக்கு அந்த வாடை பிடிக்கவே பிடிக்காது.

உன் மாமனார் என்னை மணந்த பின்னர் இவரைப் பார்த்த முதல் சமயம் யாரோ ஒருவர் என்று சொன்னார். இரண்டாவது சமயம் உனக்கு தெரிந்தவர் என்று சொன்னார். மூன்றாவதாகப் பார்த்த சமயம் உனக்கு வேண்டியவர் என்று சொன்னார்.  அதற்குப் பின்னர் தான் இவரிடம் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். அதன் பின்னர் இவர் வந்தால் எதுவும் பேசாமல் இவர் பேசுவதை கேட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார். சில நேரங்களில் வெளியில் வேலை இருக்கின்றது என்று சொல்லி விட்டுப் போய் புகை பிடித்து முடிந்த பின்னர் நீண்ட நேரம் கழித்து தான் வீடு திரும்புவார்.

உன்னிடம் என்னுடைய காதலை மறைக்காமல் கூறி நீ தெரிந்து கொண்ட ஒரே காரணத்தால் அதே போன்று உன் முன்னிலையில் இன்றைக்கு என் விரலை எப்படித் தொட்டார் என்று நீ பார்க்க மறுபடியும் தொட அனுமதிக்கின்றேன் என்று அவள் தனது ஆள்காட்டி விரலை நீட்ட நானும் மீண்டும் ஒரு முறை அதே போன்று தொட்டேன். 

https://myloverismyangel.blogspot.com/2018/07/meeting-for-long-duration-send-off.html

இந்த நேரத்தில் என்னவளின் மருமகள் என்னிடம் நீங்கள் என் மாமியாரை நினைக்கும் மலரும் நினைவுகள் பற்றிச் சொல்லுங்களேன் என்றாள்.

நானும் இவளும் காதலிக்கும் சமயம் நான் இவளுடைய குடும்பத்தாருடன் அடிக்கடி இரவுக் காட்சிக்கு திரைப்படம் பார்க்கச் செல்வேன்.  நானும் இவளும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர முடியாவிட்டாலும் தியேட்டர்களில் நடைபாதைக்கு இருபுறமும் இருக்கும் இருக்கைகளில் ஒரு பக்கம் நானும் மறு பக்கம் அவளும் அருகருகே அமர்ந்து படம் பார்ப்பதில் தனி குஷி நம் இருவருக்கும்.  திரைப்படம் முடிந்து வரும் சமயம் இவளது தாயாரும் மற்றவர்களும் மெதுவாக நடந்து வருவார்கள். நானும் இவளும் நாம் பேசுவது பிறருக்குக் கேட்கக் கூடாது என்பதற்காக  30 அடி தூரம் முன்னால் சந்தோஷமாக பேசிக் கொண்டே நடந்து வந்து வீடு திரும்புவோம்.  அவ்வாறு நாங்கள் பார்த்த திரைப்படங்களில் ஒன்று நெஞ்சிருக்கும் வரை. அந்தப் படத்தில் வரும் பாடலில் “வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன். வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன். கண்ணில் நிரை காணாமல் கவலை ஏதும் கூறாமல் என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன். எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு” என்னும் வரிகளை மனப்பாடம் செய்து எப்போதும் என்னிடம் பாடிக் கொண்டே இருப்பாள். படம் பார்த்ததிலிருந்து நான் வேலையில் சேரும் நாள் வரைக்கும் ஏறக்குறைய நான்கரை ஆண்டுகள். நான் வேலையில் சேர்ந்த பின்னர் எங்கும் எப்போதும் என்னைச் சுற்றி நான்கைந்து பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். எனவே நான் என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் எப்போதும் இவள் நினைவில் தவிப்பேன்.

இதன் பின்னர் என்னவள் தொடர்ந்தாள்.

என்னைச் சந்தித்த பின்னர் என்னுடைய முதலாவது பிறந்த நாளுக்கு இவர் வாங்கிக் கொடுத்த அன்புப் பரிசு தான் என் கழுத்தில் இருக்கும் இந்த டாலர் என்று சொல்லி டாலரைக் காட்டினாள். 

நாம் இருவரும் நெருங்கிய காதலர்களாக இருந்த சமயம் தீபாவளிப் பண்டிகைக்காக  இவர் எனக்கு எந்த மாதிரியான நிறத்தில் உடைகள் பிடிக்குமோ அது மாதிரியான நிறத்தில் பாவாடை தாவணி இரவிக்கை மற்றும் உள்ளாடைகள் அனைத்தையும் வாங்கி வந்திருந்தார்.  நான் தீபாவளியன்று மற்ற உறவினர்களுடன் கோவிலுக்குச் சென்று திரும்பும் சமயம் இவர் வீட்டிற்குள்ளிருந்து வெளியே விழுவதைப் பார்த்தேன். என்னை திருமணம் செய்து கொள்ள முறையாக என் தாயாரிடம்  தீபாவளியன்று தனது விருப்பத்தைத் தெரிவித்து பெண் கேட்டு வந்த சமயம் என் தாயார் நமது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இவரை வீட்டிலிருந்து வெளியே தள்ளி விட்டு இரத்த காயங்களுடன் வீடு திரும்பி தீபாவளி கூட கொண்டாடாமல் புதுத் துணி உடுத்தாமல் ஊருக்குத் திரும்பி விட்டார் என்பதனை மறுநாள் தெரிந்து கொண்டேன்.  எனக்காக இவர் ஆசை ஆசையாக வாங்கியிருந்த புத்தாடைகளை நான் இவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியவில்லை.  எனவே எனக்கு என் தாயார் மீது இருந்த அன்பு அப்படியே வெறுப்பாக மாறி விட்டது.

அதே போல இவர் என்னை திருமணம் செய்து கொள்ள முறையாக தெரிவித்து இவரது தந்தை மறுத்து விட்டார்.

இவரது தந்தை என்னை இவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்ட ஒரே காரணத்தால் இவரது தந்தையின் 60 வயது பூர்த்தி திருமணத்திலும் கலந்து கொள்ளவில்லை.

பெற்றோர் சொந்தமாக வாங்கிய வீட்டின் கிரஹப் பிரவேசத்திலும் கலந்து கொள்ளவில்லை. பெற்றோர் வீட்டிற்குச் செல்வதையும் நிறுத்திக் கொண்டார். என்னை விட அழகான படித்த பெண்களுடைய உறவுகளையெல்லாம் இவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனக்கு கட்டாய திருமணம் நடந்தது கூட தெரியாமல் என்னை பதிவுத் திருமணம் செய்து கொண்டு அழைத்து வர இங்கு வீடு பார்த்துக் கொண்டு இருந்த சமயம் மொட்டை மாடியிலிருந்து நான் இவரைப் பார்த்து அழைத்த பின்னர் தான் இவருக்கு எனது திருமண விஷயம் தெரிய வந்தது.

தீபாவளிக்கு இவர் வாங்கிய புத்தாடைகளை  எனக்கு திருமணம் ஆன பின்னர் காணும் பொங்கல் அன்று என்னிடம் கொடுத்து இவரும் நானும்  சேர்ந்து பாவாடை தாவணியுடன் சந்தோஷமாக  உடுத்தி  உண்மையான மாற்று தீபாவளி கொண்டாடினோம். என்னுடைய கட்டாயத் திருமணத்திற்குப் பின்னர் அன்று தான் முதல் முறையாக சந்தாஷப் பட்டேன்.

இவரது தாயாருக்கு நான் மருமகளாக வரவேண்டும் என்று நிறைய ஆசை. ஆனால் என்னுடைய தாயாரும் இவருடைய தந்தையும் மறுத்து விட்டார்கள். எனவே இவரது தாயார் எனக்குத் திருமணம் ஆன பின்னர் என் வீட்டிற்கு நேரில் வந்து என்னிடம் கேட்டுக் கொண்ட பின்னர்  நான் சொன்னபடியால் தான் மீண்டும் இவரது வீட்டிற்குச் சென்று திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் சம்மதித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் நம்மிடையே உள்ள நெருக்கம் இன்று வரை கொஞ்சம் கூட குறையவில்லை.

நான் இவருடன் சேர்ந்து போகாத கோயில்கள் இல்லை வழிபடாத தெய்வங்கள் இல்லை. ஆனால் இவர் இன்று தான் இரண்டாவது முறையாக உன் முன்னிலையில் என்னைத் தொட்டு இருக்கின்றார்.  இன்று வரையில் எனக்கு பறக்கும் முத்தம் கூட இவர் கொடுத்ததில்லை. இது தான் நமது உண்மையான காதலின் புனிதம் என்று சொல்லி அவளது மருமகளை பரவசப் படுத்தி விட்டாள்.

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட என்னவளின் மருமகள் என்னுடைய நாத்தனார் உங்களை பாபா என்று அழைக்கும் போது நான் மட்டும் ஏன் உங்களை வாங்க போங்க என்று சொல்ல வேண்டும் என்று யோசித்து பார்த்தேன். எனது திருமணத்திற்குப் பின்னர் முதல் முறை வந்த சமயம் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் முதல் முறையாக என்னுடைய மாமியாருடன் ஒரு டம்ளர் காப்பியினை  பகிர்ந்து பருகியதைக் கண்டதிலிருந்து உங்களை நான் என்னுடைய மாமனார் ஸ்தானத்தில் என் உள் மனதில் வைத்துள்ளேன். இருந்தாலும் நான் எதனையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இது வரை இருந்துள்ளேன் என்று சொல்லி விட்டு எனக்கு  இப்போது உங்கள் இருவருடனும் சேர்ந்து காப்பி குடிக்க வேண்டும் போல் இருக்கின்றது  என்று சொன்னாள். 

அதன் படி காப்பி குடித்து முடித்த சமயம் புது வீட்டிற்கு விரைவில் கிரஹப் பிரவேசம் செய்ய இருக்கின்றோம். அதில் கட்டாயம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். நீங்கள் இருவரும் சேர்ந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கூறினாள்.


https://myloverismyangel.blogspot.com/2018/07/meeting-for-long-duration-send-off.html

அதற்கு என்னவள் நமக்குப் பிரியமான நமது மருமகள் உங்களை மிகவும் நம்புகிறாள் எனவே வருவீர்களா அல்லது வரமாட்டீர்களா என்று இப்போதே சொல்லி விடுங்கள். ஏனெனில் நீங்கள் வருவீர்கள் என்று ஏக்கத்துடன் காத்திருந்து வராமல் இருப்பது ஏமாற்றத்தை கொடுத்து விடும் என்று சொன்னாள். 

அதற்கு நான் எதனையும் மறைக்க விரும்பாமல் நானும் இவளும் நம் இருவர் குடும்பத்திலும் நிகழும் எந்த ஒரு விசேஷங்களிலும் கலந்து கொள்வதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டோம். ஆனால் அனைத்து நல்லது கெட்டதுகளையும் என்னுடைய ஆலோசனை இல்லாமல் இதுவரை உனது மாமியார் செய்தது இல்லை என்று சொன்னேன். 

உடனே என்னவள் அவளது மருமகளிடம் இவர் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் நான் கலந்து கொண்டாலோ அல்லது எனது வீட்டில் நடக்கும் விசேஷங்களில் இவர் கலந்து கொண்டாலோ நாம் இருவரும் முன்னின்று ஹோமத்தில் அமர்ந்து நடத்தி வைக்க முடியவில்லை என்னும் கவலை வந்து விடும் என்பதால் நான் முதல் முறை கர்ப்பிணியாக இருக்கும் சமயம் இவ்வாறு முடிவு எடுத்து விட்டோம். 

நேற்று நான் இவருடன் ஆட்டோவில் வரும் சமயம் சிறுவயதில் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு கல்யாண ஊர்வலத்தில் ஒரே வாகனத்தில் செல்லும் பாக்கியம் கிடைக்காததால் வாழ்க்கை முழுவதும் ஏங்கி  கஷ்டப்பட வேண்டி இருக்கின்றது என்று சொன்னேன் என்று எதனையும் மறைக்காமல் சொன்னாள். 

உனது நாத்தனார் திருமணத்தின் போது உன்னுடைய மாமனார் உயிருடன் இருந்த போதிலும் இவர் வந்த சமயம் தான் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. இவர் கொண்டு வந்த இனிப்புகளை வைத்துத் தான் ஜாதகத்தினை பூஜை செய்து தரகரிடம் கொடுத்தோம். உன் மாமனார் இவரிடம் ஆலோசித்து இவர் சொன்னபடி தான் மாப்பிள்ளையை தேர்வு செய்தார். முதல் மகன் காதல் விஷயத்தை என்னை இவர் காதலித்த அனுபவங்களைக் கொண்டு கண்டுபிடித்து முதல் மகன் மாமனார் இவரது நண்பராக இருந்ததால் அந்த வீட்டிற்குச் சென்று பேசி முடித்து வைத்தார். அதே போல உன்னுடைய திருமணத்திற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்தார். ஆனால் இது வரை இவர் எந்த விசேஷங்களிலும் கலந்து கொண்டதில்லை. 

இப்போது கூட வீடு கட்டுவதற்கு திருப்பதிக்குச் சென்று எவ்வாறு வழிபட வேண்டும் என்று சொல்லிய பின்னர் நீயும் நானும் உன் கணவரும் உன் தாயாரும் திருப்பதிக்கு சென்று வந்த பின்னர் தான் வீடு கட்ட முடிந்தது. 

எல்லாவற்றையும் செய்வதற்கு எனக்கு ஆலோசனை வழங்குவார்.  ஆனால் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். எனவே புது வீடு கிரஹப்பிரவேசத்திற்கு அழைக்க வேண்டியது நமது கடமை. ஆனால் விசேஷம் முடிந்த பின்னர் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து தான் வருவார் என்பது எனக்கு மட்டும் தெரிந்த உண்மை.

இன்று என்னமோ தெரியவில்லை நம் மீது உள்ள தனிப்பட்ட பாசத்தின் காரணமாக நேற்று நான் மயக்கம் தெளியும் வரை இருக்கலாமே என்று கேட்டுக் கொண்டதற்கு உறவினர்கள் வரும் சமயம் நான் இங்கே இருப்பது நல்லதல்ல என்று கூறிச் சென்று விட்டு மறுநாளே அதாவது இன்று மீண்டும் வந்துள்ளார். எனக்கு ஓரே ஆச்சர்யம் அதே நேரத்தில் பன்மடங்கு சந்தோஷம் என்று சொன்னாள்.

நான் என்னவளிடம் புது வீடு சென்ற பின்னர் உனது சம்மந்தியும் கூட இருக்கப் போவதால் நாம் இருவரும் முன்பு போல சகஜமாக நெருக்கத்துடன் இருக்க முடியாதது என்பதாலும் முன்பு போல  மனம் விட்டுப் பேச முடியாது என்பதாலும் என்னுடைய வருகை குறையும் என்று தெரிவித்தேன்.

என்னவளின் மருமகள் கிரஹப் பிரவேசம் முடிந்தவுடன் கட்டாயம் வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமயம் அவளது வளர்ப்புத் தாயார் வந்து சேர்ந்தார்கள்



https://myloverismyangel.blogspot.com/2018/07/meeting-for-long-duration-send-off.html



அதன் பின்னர் சற்று நேரம் உரையாடி விட்டு நான் அனைவரிடமும் பிரியா விடைபெற்று மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டேன்.

என்னவள் எதனையும் சொல்ல முடியாமல் தவித்து என்னுடன் மருத்துவ மனை தாண்டி கூடவே கொஞ்ச தூரம் வந்தாள்.  அப்போது நான் பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஹோட்டலில் சாப்பிடுவோமே என்று கேட்டு அங்கு சென்று நாம் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சமயம் நீங்கள் இப்போது பேசி வந்ததைப் பார்த்தால் இனிமேல் என்னைப் பார்க்க வரவே மாட்டீர்கள் போலத் தெரிகின்றதே என்று சொல்லிய சமயம் அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. 

அதற்கு நான் உன்னை பார்க்க வரவே மாட்டேன்  என்று சொல்லவில்லை.  அடிக்கடி வருவது குறையும் என்று தான் சொன்னேன். ஏனெனில் உன்னுடைய மருமகளின் வளர்ப்புத் தாயார் கூடவே புதிய வீட்டில் இருக்கப் போவதால் நாம் இதுவரையில் பேசி வந்தது போல தனிமை கிடைக்கப் போவதில்லை. அதனால் முன்பு போல சரளமாகப் பேச முடியாது என்பதனைச் சொன்னேன். 

அதனை அவள் ஏற்க மறுத்து நீங்கள் என்னுடன் தனிமையில் பேசாவிட்டாலும் பரவாயில்லை. கட்டாயம் என்னைப் பார்க்க வந்து சென்றால் போதும்.  ஏனெனில் உங்களைப் பார்க்காமல் என்னால் ஆறு மாங்களுக்கு மேல் இருக்க முடியாது  என்று சொல்லி விட்டு நான் ஆட்டோவில் ஏறும் வரை காத்திருந்து மிகுந்த சோகத்துடன் வழியனுப்பி வைத்தாள்.

கட்டாயம் வருடத்திற்கு இரு முறையாவது வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.  


என்னவள் என்னால் எனக்காக  எப்போதும்
ஏங்கக் கூடாது எனும் பொருட்டு
வருகின்றேனென ஒப்புக் கொண்டேன் உளமாற


https://myloverismyangel.blogspot.com/2018/07/meeting-for-long-duration-send-off.html


என்னவள் உதட்டினில் ஒரு சிரிப்பு
அது போதும் என் நினைவில் நீங்காமல் இருப்பதற்கு



வெள்ளி, 6 ஜூலை, 2018

Happiness Again / மீண்டும் ஒரு சந்தோஷம்

மீண்டும் ஒரு சந்தோஷம்.


வெளி நாடுகளில் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொள்பவர்களின் பெற்றோர் ஏக்கம்





https://myloverismyangel.blogspot.com/2018/07/happiness-again.html


சென்ற முறை நான் என்னவள் வீட்டிற்குச் சென்ற சமயம் அவளுடன் மனம் விட்டு சரளமாகப் பேச முடியவில்லை என்னும் ஏக்கத்துடன் திரும்பிய படியால் மீண்டும் ஒரு முறை என்னவளைச் சந்திக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் ஆறு மாதங்கள் கழித்து அவளது வீட்டிற்குச் சென்றேன். பழைய வீட்டில் தான் இருந்தார்கள். புது வீடு கட்டி முடிந்து விட்டது ஆனால் இன்னமும் குடியேறவில்லை.

நான் வீட்டில் நுழையும் சமயம் என்னவளும் மருமகளின் வளர்ப்புத் தாயாரும் மட்டுமே இருந்தார்கள். விசாரித்தமைக்கு மருமகளை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சேர்த்துள்ளோம். இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் பிறந்து விடும் என்று சொல்கின்றார்கள் என்று தெரிவித்தார்கள்.

என்னவள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள். அந்த சமயம் அவளது மருமகளின் வளர்ப்புத் தாயார் சமையல் முடியும் வரையில் நான் உங்களுடன் பேசலாமா என்று கேட்டார். அதில் என்ன தயக்கம் நான் அதற்குத் தானே வந்திருக்கின்றேன் என்று சொன்னேன்.

அப்போது சமையலறையில் இருந்த என்னவளை அழைத்து என்னருகில் நிற்கச் சொல்லி திடீரென நம் இருவர் காலிலும் விழுந்து விட்டார்கள். நமக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒவ்வொரு பெண்ணிற்கும் தலைப்பிரசவம் தாயார் வீட்டில் தான் நடக்கும். நான் என்னுடைய வளர்ப்புப் பெண்ணின் முதல் பிரசவத்தை காஞ்சிபுரத்தில் உள்ள என்னுடைய வீட்டில் வைத்துக் கொள்ள ஆசைப் பட்டேன். ஆனால் என்னுடைய பிள்ளைகள் அவளது தந்தை நம்முடைய வீட்டில் வேலை பார்க்கும் சமயம் அகால மரணமடைந்த ஒரே காரணத்தால் தான் நாங்கள் கருணை அடிப்படையில் நமது சொந்த செலவில் திருமணம் செய்ய சம்மதித்தோம். நமக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவு முறையும் கிடையாது என்று சொல்லி என்னை அழ வைத்து விட்டார்கள். 

உங்களை நான் முதன் முறையாக சந்தித்த சமயம் எனது பிள்ளைகளின் உண்மையான மன நிலையினை தெளிவான முறையில் எடுத்துச் சொன்னீர்கள். என் பிள்ளைகள் என்னுடைய ஆசைகளை நிறைவேற்ற மறுத்து விட்டார்கள். மனித மனங்களைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. மனித நேயமும் அவர்களுக்கு இல்லை

காசு பணம் என்றும் சொத்து சுகம் என்றும் ஆசைப் பட்டு உண்மையான அன்பினை இழக்கின்றார்கள். எனவே நான் இனிமேல் இங்கு இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு எனது வீட்டிற்கான பூட்டிற்கு ஐந்து சாவிகள் தயார் செய்து வெளி நாடுகளில் வசிக்கும் என்னுடைய நான்கு மகன்களுக்கும் தபால் மூலம் நான்கு சாவிகளை அனுப்பி  விட்டேன். என்னிடம் ஒரு சாவியினை வைத்துக் கொண்டேன்.

காரணம் கேட்டார்கள். அதற்கு நீங்கள் வருடத்தில் எப்போதாவது உங்கள் இஷ்டப்படி உங்கள் மனைவிகளின் வீடுகளில் வருகின்ற விசேஷங்களுக்கோ அல்லது வேறு ஏதேனும் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டோ வரும் சமயம் உங்களுக்காக வருடம் முழுவதும் வீட்டில் நான் தன்னந் தனியே காவல் நாய் போல காத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனது கணவர் மறைவிற்குப் பின்னால் யாருடைய துணையும் இல்லாமல் தன்னந் தனியாக எப்போது என்ன நடக்குமோ என்று உயிருக்குப் பயந்து இருப்பதனை விட என்னுடைய கடைசி காலத்தில் காசி இராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கோ அல்லது உண்மையான அன்பு என் மீது யார் வைத்து இருக்கின்றார்களோ அவர்கள் இல்லங்களுக்கோ சென்று தங்கி சந்தோஷமாக பாது காப்புடன் இருக்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டேன் என்று சொன்னார்கள்.

எனது மருமகள்கள் கர்ப்பமாக இருக்கும் சமயம் ஒரு பேரன் பேத்தியைக் கூட இந்தியாவில் பெற்றெடுக்கவில்லை. காரணம் கேட்டால் இந்தியாவிற்கு வந்து குழந்தை பெற்றுக் கொண்டு வெளி நாடு செல்வோமேயானால் அந்த நாட்டின் குடியுரிமை குழந்தைகளுக்குக் கிடைக்காது என்று சொல்லி மருமகள்களின் பெற்றோர்களை வெளி நாடுகளுக்கு வரவழைத்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.  என்னையோ என் கணவரையோ ஒரு மகன் கூட ஒரு முறை கூட தங்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம் அழைக்கவில்லை. இதனால் நமது பேரன் பேத்திகளை பிறந்தவுடன் கண்ணால் காணும் பாக்கியம் நம் இருவருக்கும் கிடைக்கவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார்கள்.

நான்கு மகன்களுக்கும் பேரன் பேத்திகள் இருந்தும் ஒரு குழந்தையைக் கூட பிறந்தவுடன் என் கரங்களில் எடுத்துப் பார்த்ததில்லை எனவே நான் முதன் முதலாக என்னிடம் வளர்ந்த பெண்ணின் குழந்தையை என் கைகளில் ஏந்தும் பாக்கியத்தினைப் பெற்றுள்ளேன் என்று சொன்னார்கள்.  அந்த பாக்கியத்தினை ஏற்படுத்தி தந்தமையாலும் நீங்கள் இவர்கள் மூலம் எனக்கு அறிமுகமான படியாலும் தான் நான் உங்கள் இருவர் காலிலும் விழுந்தேன். என்னை விட வயது குறைந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. 

ஏனெனில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல் உள்ளதை உள்ளபடி எதனையும் மறைக்காமல்  எதுவும் சொல்லத் தயங்காமல் என் குடும்ப உறுப்பினர்களின் உண்மையான மன நிலை பற்றியும் மேற்கொண்டு நான் என்ன செய்தால் கடைசி காலத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது பற்றியும் நீங்கள் சொன்ன  அறிவுறை எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது என்று சொன்னார்கள்.

இந்த நேரத்தில் சாப்பாடு தயாராகி விட்டது. அப்போது என்னவள் சாப்பாட்டு கேரியருடன் மருத்துவ மனை செல்லத் தயாரானாள். அதற்கு இரண்டாவது மருமகளின் தாயார் நீங்கள் இங்கேயே இருந்து இவரிடம் பேசி விட்டு இவருக்கு மதிய உணவு பரிமாறிவிட்டு நீங்களும் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் முதலில் மருத்துவமனை சென்று நானும் அவளும் சாப்பிட்டு முடிக்கின்றோம் என்று சொல்லி புறப்பட்டார்கள்.

மீண்டும் ஒருமுறை என்னவளுடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டு போய் விட்டால் இவர்கள் என்னுடன் தங்கி இருக்கப் போகின்றார்கள். எனவே நம்மால் இனிமேல் முன்பு போல மனம் விட்டுப் பேச முடியாது என்று மிகவும் கவலையாக இருக்கின்றது என்று கண்ணீர் விட்டாள். 

அதற்கு நான் உன்னுடைய திருமணத்திற்குப் பின்னர் என்னைப் பிரிந்து நீ மேலும் கவலைப்படக் கூடாது என்பதற்காகவே  இங்கு பணியாற்றி வந்த  சமயம் மாதா மாதம் உன்னை தவறாமல் சந்தித்தேன்.  உன்னைச் சந்திக்க வரும் சமயம் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி நாம் இருவரும் சந்தித்தவுடன் எல்லையில்லாத ஆனந்தமாக மாறி  நான் திரும்பும் சமயம் நம் இருவருக்கும் துக்கத்தைக் கொடுத்தது என்பது மறக்க முடியாத உண்மை. அந்த துக்கம் மறுமுறை நாம் இருவரும் சந்திக்கும் வரையில் இருந்து கொண்டே தான் இருக்கும். என் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க நான் உன்னை விட்டு சற்று தொலைவில் இருப்பது என்னும் எண்ணத்துடன் உன்னையும் கலந்தாலோசித்த பின்னர் தான் என்னுடைய விருப்பத்திற்கு மாறாக வெளியூருக்கு மாற்றிலில் செல்வதென முடிவெடுத்தேன். இருந்தாலும் வருடத்தில் இரண்டு மூன்று முறை சந்தித்தாலும் மனம் விட்டுப் பேச முடிந்தது. மன நிம்மதி கிடைத்தது.

நாம் இருவரும் ஆரம்ப காலத்தில் பேசிக் கொண்டபடி கலாச்சாரக் கைதிகளாக இருந்தாலும் உன்னுடைய வீட்டில் இது வரை நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து விசேஷங்களிலும் நீயும் நானும் கலந்தாலோசித்து தான் முடிவெடுத்து வருகின்றோம். திருமணம் ஆவதற்கு முன்னர் உனக்கு தீபாவளிக்கு எடுத்த ஆடைகளை தீபாவளிக்குப் பின்னர் உன்னைச் சந்தித்த போது கொடுத்து சந்தோஷப் படுத்திலிருந்து ஆரம்பித்து முதல் குழந்தைக்குப் பெயர் தேர்வு செய்வது  இரண்டாவது மகனுக்கு வீடு கட்டி குடியேறுவது மற்றும் பேரன் அல்லது பேத்தி பிறக்கும் சமயம் இங்கு இருப்பது என்பது எப்படியோ எனக்கு வாடிக்கை ஆகி விட்டது  எந்த ஒரு சுப காரியத்திலும் என்னுடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் நீ முடிவு எடுத்துக் கொண்டு வர முடிகின்றது.

உனது இரண்டாவது மருமகளுக்கு நாம் இருவரும் உயிருக்கு உயிராகப் பழகி நெருங்கிய காதலர்களாக இருந்தோம் என்னும் விஷயம் தெரிந்திருந்தும் உனது மனம் புண்படக்கூடாது என்னும் வகையில் அவள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு வருகின்றாள்.  தற்போது அவளது வளர்ப்புத் தாயார் நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பதாலும் காசு பணம் இருந்தும் நிம்மதி கிடைக்காததாலும் உங்களுடன் தங்க ஆசைப் படுகின்றார்கள்.

அவர்களுக்கும் ஒரு பெருந்தன்மை உள்ளது. எப்படி எனில் நீண்ட நாட்கள் கழித்து நான் வந்திருப்பதால் உன்னிடம் நான் பேச முடியாமல் நாம் இருவரும் கவலைப்பட்டு ஏங்கக் கூடாது என்பதனை மனதில் வைத்து நான் மட்டும் சென்று வருகின்றேன் என்று சொல்லி அவர்கள் மட்டும் மருத்துவமனை சென்றுள்ளார்கள் என்று பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் பேசினாள். என்ன விஷயம் என்று கேட்டேன்.

நீங்கள் வந்துள்ள விவரம் சொல்லியிருக்கின்றார்கள். எனவே எனது மருமகள் உங்களையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்கின்றாள். அவளது வளர்ப்புத் தாயார் காரணம் கேட்டதற்கு அவர் வந்து என்னைப் பார்த்தால் என் வயிற்றில் இருக்கும் குழந்தை அவரைப் பார்க்க அவர் திரும்ப செல்வதற்குள் வெளியே வந்து விடும் என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கின்றாள். எனவே நாம் இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டு உணவு பரிமாறட்டுமா என்று கேட்டாள்.  நானும் சரியென்று சொல்லிவிட்டு மதிய உணவினை இருவரும் சாப்பிட்டவுடன் மருத்துவ மனை புறப் பட்டோம். 

முதல் முறையாக நானும் அவளும் ஆட்டோவில் அமர்ந்து செல்லும் சமயம் இது போன்று நாம் இருவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்து  செல்வது நமது திருமண ஊர்வலமாக இருந்திருந்தால் நான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருந்திருப்பேன்  என்று சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு  நமது ஆரம்ப கால காதல்  ஞாபகத்திற்கு வந்தது.  

ஆண்களுக்கு அரும்பு மீசை முளைக்கும் சமயம் 18 வயதை வாலிப வயது என்பார்கள். பெண்களுக்குப் பருவமடைந்த பின்னர் கன்னிப் பருவம் என்பார்கள்.  ஆனால் எனக்கு 18 வயது ஆரம்பிக்கும் முன்னர் இவளது 14வது வயதில் பருவமடைந்த ஒரு வாரத்தில் என்னைச் சந்தித்து முன்பின் அறிமுகமில்லாத நாம் இருவரும் முதலாவதாகப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரை ஒருவர் உடனே புரிந்து கொண்டு  பருவமடைந்த 15 நாட்களில் நாம் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டோம் என்பது வேறு யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்.  உண்மையைச் சொல்லப் போனால் நாம் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கும் சமயம் நம்மில் ஒருவர் கூட மேஜர் கிடையாது.

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பது போல நம் இருவருக்கும் வயதாகி பேரன் பேத்திகள் வந்த போதிலும் நமது இளமைக் காலங்கள் இன்று வரை பசுமையாவே இருக்கின்றன. திருமணத்திற்குத் துடிக்கின்றன.

நாம் இருவரும் மருத்துவமனை சென்ற பின்னர் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த சமயம் ஒரு மணி நேரம் கழித்து அவளது மருமகள் குடிப்பதற்கு என்ன இருக்கின்றது என்று கேட்டாள். பழச்சாறு மற்றும் பால் மற்றும் காப்பி இருக்கின்றது என்று சொன்னார்கள். உடனே அவளது மருமகள் எனக்கு காப்பி வேண்டும் என்று சொல்ல அவளது வளர்ப்புத் தாயார் காப்பி கொடுத்தார்கள். 

அவள் பெற்றுக் கொள்ளும் முன்னர் எனக்கு நீங்கள் இருவரும் பகிர்ந்து பருகி விட்டு மூன்றாவது பங்கினை கொடுக்க வேண்டும் என்று சொன்னாள். என்னால் மறுக்க முடியவில்லை. நானும் அவளும் அவளது மருமகளும் ஒரே டம்ளர் காப்பியினை பகிர்ந்து குடித்தோம் மிகவும் சந்தோஷமாக.

அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளது வளர்ப்புத் தாயார் என்னவென்று தெரியாமல் எங்களது ஒற்றுமையையும் வித்தியாசமான செயலையும் கண்டு திகைத்து நின்றார்கள்.



https://myloverismyangel.blogspot.com/2018/07/happiness-again.html

ஹோமத்தின் போது அக்னியில் விநாயகர் உருவம்

கட்டிலின் இரண்டு பக்கங்களிலும் இருந்த நம் இருவர் கரங்களையும் தம்முடைய இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு நீங்கள இருவரும் சேர்ந்து எனக்கு ஒரே சமயம் முத்தமிட்டு பொட்டு வையுங்கள் எனக்கு சுகப் பிரசவம் நடக்கும் என்று என்னவளின் மறுமகள் கேட்டுக் கொண்டாள். நானும் என்னவளும் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று நாம் வேலை தேடிக் கொண்டிருக்கும் சமயம் கனவில் வந்த அந்த பிள்ளையாரை நினைத்துக் கொண்டு (என்னவளது காதில் சொல்லிய பின்னர்) அவளும் நானும் சேர்ந்து அவளது மருமகள் நெற்றியில் பொட்டு வைத்து ஆசிர்வதித்தோம்.

சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அழைத்துச் சென்றார்கள். 

இரண்டு மணி நேரத்தில் பெண் குழந்தை பிறந்த சேதி சொன்னார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கும் அவளுக்கும் தனிமை கிடைத்தமையால் மீண்டும் ஒரு முறை சந்தோஷமாக  அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  என்னவளின் மருமகளின் வளர்ப்புத் தாயாருக்கு எல்லையில்லாத  ஆனந்தம். ஏனெனில் இதுவரையில் தமது பேரன் பேத்திகள் பிறந்தவுடன் தமது கரங்களில் வைத்துப் பார்த்ததேயில்லை. அந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் தற்போது கிடைக்கப் போகின்றது.


அதன் பின்னர் பிறந்த குழந்தையை கொண்டு வந்து காட்டினார்கள். நான் மருத்துவரிடம் குழந்தையை என்னவளது மருமகளின் வளர்ப்புத் தாயாரிடம் கொடுக்குமாறு கூற அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.  அப்போது என் வளர்ப்பு மகள் நீங்கள் வந்திருப்பது தெரிந்தவுடன் உடனே என்னை வந்து அவரைப் பார்க்கச் சொல்லுங்கள். அவர் வந்து என்னைப் பார்த்தால் என் வயிற்றில் உள்ள குழந்தை அவரைப்  பார்க்க உடனே வெளியே வந்து விடும் என்று சொன்னவாறே நடந்து விட்டது.

இதிலிருந்து   அவள் எங்கள் எல்லோரிடமும் செலுத்தும் அன்பினைக் காட்டிலும் அதிகமான அன்பு செலுத்தி உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றாள் என்பது எனக்குத் தெரிகின்றது என்று சொன்னார்கள்.


அவர்கள் கைகளில் குழந்தை இருக்கும் சமயம் நானும் என்னவளும் சேர்ந்து  குழந்தையின்  இரண்டு கன்னங்களிலும் ஒரே நேரத்தில் முத்தமிட்டோம்.  அதனைக் கண்ட அவர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள்

அதன் பின்னர் அவள் குழந்தையைப் பெற்றுக் கொண்டு என்னிடம் கொடுத்தாள். நான் மறுபடியும் ஒரு முறை குழந்தையை அரவணைத்து முத்தமிட்டு அவர்களிடம் கொடுத்தேன்.

அதன் பின்னர் மருத்துவமனை செவிலியர்கள் அவளது இரண்டாவது மருமகளை அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள். 

குழந்தையை அருகே உள்ள தொட்டிலில் படுக்க வைத்தார்கள். நான் அருகில் உள்ள கடைக்குச் சென்று பிறந்துள்ள குழந்தைக்கு புத்தாடைகள் வாங்கி வந்து கொடுத்தேன்.

அப்போது என்னவள் எனக்கு முதல் மகள் பிறந்திருக்கும் போது கொடுத்தது போலவே இருக்கின்றதே என்று மிகவும் சந்தோஷப் பட்டாள்.

என்னவளின் இரண்டாவது மகன் வந்ததும் என்னைப் பார்த்து சந்தோஷப் பட்டதுடன் நமது வீட்டில் எந்த ஒரு நல்லவைகளும் நீங்கள் வராமல் நடக்காது என்பதனை மீண்டும் நிரூபணம் ஆக்கி விட்டீர்கள் என்று சொன்னதைக் கேட்டு அவள் மனைவியின் வளர்ப்புத் தாயார் ஆச்சர்யப்பட்டாள்.

அந்த நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கி விட்டபடியால் நான் அவர்களிடமிருந்து விடைபெற வேண்டியதாயிற்று. 

என்னவளுக்கு பேத்தி கிடைத்து விட்டாள் என்ற சந்தோஷம் ஒரு புறம். நான் புறப்படுகின்றேன் என்னும் சோகம் மறுபுறம்.


நான் அனைவரிடத்திலும் விடைபெற்று விட்டு திரும்பிய சமயம் என்னவள் தனது மருமகளுக்கு மயக்கம் தெளியும் வரை இருந்து பின்னர் செல்லலாமே என்று கேட்டுக் கொண்டாள். 





உனது மருமகள் ஆசைப்பட்ட படி நான் உன் மருமகளைப் பார்த்தேன். அவள் குழந்தை என்னைப் பார்த்து விட்டது அது போதும் என்றவாறு விடை பெற்றேன். அவளுக்கு மீண்டும் சோகம் கவ்விக் கொண்டது. எனக்கு மட்டும் ஆனந்தமா என்ன? எனக்கும் அதே நிலை தான்.



புதன், 4 ஜூலை, 2018

House Construction Work / வீடு கட்டும் பணிகள்.

வீடு கட்டும் பணிகள்.




https://myloverismyangel.blogspot.com/2018/07/house-construction-work.html

என்னவள் மற்றும் என்னவளின் இரண்டாவது மருமகளின் வளர்ப்புத் தாயார் ஆகியோரிடம் நீண்ட நேரம் உரையாடி விட்டு வந்த பின்னர் சுமார் ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் என்னவள் இல்லத்திற்குச் சென்றேன்.

ஆரம்ப காலத்தில் என்னவள் மாத்திரம் தனியே இருப்பாள். இரண்டாவது மகன் திருமணத்திற்குப் பின்னர் அவளது மருமகளும் கூட இருப்பாள். இருந்தாலும் மனம் விட்டுப் பேச முடிந்தது.

தற்போது நான் சென்ற சமயம் என்னவளும் என்னவளின் மருமகளும் என்னவளின் மருமகளின் வளர்ப்புத் தாயாரும் ஆக மொத்தம் மூன்று பேர் இருந்தார்கள். எனக்கு வரவேற்பு மிகவும் பலமாக இருந்தது.

சென்றவுடன் அவர்களின் விருந்தினர் என்னிடம் பேச ஆரம்பித்தார். நீங்கள் சென்ற முறை இங்கு வந்த சமயம் என்னுடைய தனிமைச் சோகங்களுக்கான ஆலோசனை சொல்லும் சமயம் இந்தப் பெண்ணை தத்து எடுத்து இருந்தால் வரக்கூடிய அவளது கணவனை வீட்டோட மாப்பிள்ளையாக வைத்து இருக்கலாம் என்று சொன்னீர்கள். அது மட்டும் இல்லாமல் கரு உருவாவதற்கு முன்னர் திருப்பதி சென்று வழி பட்டு வரச் சொன்னீர்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் திருப்பதி சென்று நீங்கள் சொன்னபடி வழிபட்டு வந்தோம்.

திருப்பதி சென்று வழிபட்டு வந்த 15 நாட்களுக்குள் வீடு கட்டுவதற்கு ஒரு நல்ல மனை கிடைத்தது. அதனை இந்த குடும்பத்தார் கொள்முதல் செய்து தற்போது வீடு கட்டி வருகின்றார்கள். நீங்கள் சொன்னது போல இவளை தத்து எடுக்காத காரணத்தால் நான் இவளது கணவரை வீட்டோட மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள முடியாமல் போனதால் நான் இந்த வீட்டிற்கு வீட்டோட சம்மந்தியாக வந்து விட்டேன்.

எனக்கு வயதாகி விட்டது என்பதால் கீழ்தளத்தில் எனக்கும் இவளது மாமியாருக்கும் ஒதுக்கி விடுமாறும் முதல் தளத்தில் எனது வளர்ப்புப் பெண்ணும் அவள் குடும்பத்தினரும் தங்குவது எனவும் அதற்கு மேல் உள்ள தளத்தினை காலியாகவே வைத்து எனது உறவினர்கள் மற்றும் இவர்களது உறவினர்கள் வரும் சமயம் தங்க வைப்பது எனவும் முடிவு செய்து விட்டோம். 

ஒரு சிறு திருத்தம். நீங்கள் வந்தால் உங்களை தரைத்தளத்தில் எங்களுடன் தான் தங்க வைப்போம். உங்களிடம் நிறைய பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு மாடியில் தங்க இடம் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள்.  இவர்களிடம் உள்ள பணத்திற்கு மேல் எவ்வளவு செலவானாலும் நான் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டேன். ஆனால் ஒத்தியாக அல்ல. திரும்ப கொடுக்க வேண்டாத அன்பளிப்பாக என்று சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு மிக்க சந்தோஷம்.

நான் பெரிய பங்களாவில் தனியாக இருந்து யார் துணையும் இல்லாமல் தனியே சமைத்து தனியே சாப்பிட்டு தனியே பொழுதினைக் கழித்து தனியே உறங்கி காலத்தைக் கழித்து வந்தேன். தற்போது இவர்களுடன் இருப்பதால் என்னை உண்மையிலேயே சுகவாசியாக்கி விட்டார்கள். நான் தனியே இருக்கும் போது காலையில் இது சமைக்க வேண்டும். மதியம் இது சமைக்க வேண்டும் இரவு இது சமைக்க வேண்டும் என திட்டமிட்டு எனக்குத் தெரிந்த வரை சமைப்பேன். நான் சமைப்பது சரியான ருசியுடன் இருக்காது எனவே நான் சமைப்பது எனக்கே பிடிக்காது. ஆனால் இங்கு என்னிடம் எதுவும் கேட்காமல் வேளா வேளைக்கு வித விதமாக சமைத்து ருசியாக உண்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது. இவ்வளவு ருசியாக எப்படி சமைக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு இவர்கள் ஒரு வீடியோ காசெட்டை போட்டு காண்பித்தார்கள். அந்த வீடியோவில் சமையல் தொகுப்பாளினியாக வருவது உங்களுடன் பணியாற்றியவர் என்பதனைக் கேட்டும் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டும் நான் வியந்து போனேன். எனவே நான் வீட்டோட சம்மந்தியாக சொகுசாக இருக்க ஆலோசனை  கொடுத்து உதவியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி என்று சொன்னார்கள்.

அதனைக் கேட்ட என்னவளுக்கு உள் மனதில் என்னை விட்டு பிரிகின்ற மாதிரியான ஒரு எண்ணம். காரணம் நம் இருவரைத் தவிர மூன்றாமவர் ஒருவர் இருக்கும் போது நாம் நம் இஷ்டத்திற்குப் பேசி கடந்த காலங்கள் போல் இருக்க முடியாது.  

அப்போது என்னவளைப் பார்த்தேன். உடனே அவள் நாங்கள் 10 லட்சம் போதும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் வீட்டினை கட்டி முடித்து விடலாம் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அவர்கள் கேட்க மறுத்து விட்டார்கள். அத்துடன் நான் பணம் கொடுக்கும் விபரத்தினை என்னுடைய குடும்பத்தார் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றும் என்னுடைய வசதிக்காக பெரிய வீடாக நீங்கள் கட்டப் போவதால் அதனால் ஏற்படப் போகும் அதிகப்படியான செலவுத் தொகையினை நீங்கள் எனக்காகக் கடன் வாங்கக் கூடாது என் வளர்ப்புப் பெண் கஷ்டப்படக் கூடாது என்று சொன்ன காரணத்தால் நாங்கள் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டோம் என்று சொன்னாள்.

என்னவள் தன் பேச்சினைத் தொடரும் போது பெரிய மகன் தனது மாமனார் வாங்கிக் கொடுத்த இடத்தில் வீடு கட்டி இருக்கின்றான். சிறிய மகன் தான் வாங்கிய இடத்தில் தன் மனைவி குடும்பத்தார் செய்யும் பண உதவியினைக் கொண்டு சிறிய வீட்டிற்குப் பதிலாக பெரிய வீடாகக் கட்டிக் குடியேறப் போகின்றான் என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது என்று சொன்னாள்.  எல்லாவற்றிற்கும் காரணம் உங்களது அறிவுறைகள் தான் என்றாள்.

வீடு கட்டும் பணி எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்று கேட்டேன். வாஸ்து நாளன்று பூமி பூஜை போட்டு அதன் பின்னர் அஸ்திவாரம் போட ஆரம்பித்து இது வரையில் தரைத்தளம் வரை முடித்து இருக்கின்றோம். இனிமேல் முதல் தளம் அடுத்து இரண்டாம் தளம் மொட்டை மாடி கட்டி முடிந்தவுடன் தண்ணீர் வசதி மற்றும் மின்சார வயரிங் வேலைகள் முடிய இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம் என பையன் சொன்னான் என்று தெரிவித்தாள்.

அப்போது என்னவளின் மருமகள் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். ஏதேனும் விசேஷம் உண்டா என்று கேட்டேன். தற்போது மூன்று மாதம் என்று வெட்கத்துடன் சொன்னாள். மீண்டும் ஒரு முறை அதிகார தோரணையுடன் இன்று மதிய உணவு இங்கு தான் சாப்பிட வேண்டும் அது வரை எங்கும் செல்லக் கூடாது என்று கட்டளையிட்டாள். அப்போது கொஞ்சம் சாந்தமாகப் பேசலாமே என்று என்னவள் கேட்க இப்படிப் பேசாவிட்டால் இவர் உங்கள் பேச்சை மீறி சென்று விடுவார் என்று சொன்னாள். அவளது வளர்ப்புத் தாய்க்கு ஒரே ஆச்சர்யம். இதுவரையில் இவள் இவ்வளவு உரிமையுடன் யாரிடமும் பேசிப் பார்த்ததில்லை என்று சொன்னார்கள்.

அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதியினைக் கூறி அந்த நாளில் வளைகாப்பு நடத்தலாம் என்று இருக்கின்றோம் கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நான் வழக்கம் போல் கட்டாயம் கலந்து கொள்வேன் என்று சொல்லி விட்டேன்.



https://myloverismyangel.blogspot.com/2018/07/house-construction-work.html


அப்போது அவளது மகன் வந்தான். என்னிடம் வீடு கட்டும் விவரத்தினைச் சொல்லி அநேகமாக ஏப்ரல் மாதத்தில் வீடு கட்டி முடிந்து விடும் என்று சொல்லி கிரஹப்பிரவேசம் எப்போது செய்யலாம் என்று கேட்டான். அதற்கு நான் வைகாசியில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் அல்லது ஆவணி மாதத்தில் வளர்பிறையில் சுப முகூர்த்த நாள் பார்த்து நால்வருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில் குடியேறலாம் என்று தெரிவித்தேன். 

அதே நேரம் இவளுக்கு எத்தனை மாதம் என்று ஜோதிடரிடம் தெரிவித்து கர்ப்பமாக இருக்கும் சமயம் வீடு கிரஹப் பிரவேசம் செய்யலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள் 6 மாதம் கர்ப்பம் என்றால் கிரஹப்பிரவேசம் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். 

காரணம் கிரஹப்பிரவேசத்தின் போது யாகம் செய்யும் சமயம் கீழே அமர்ந்து எழுந்திருப்பது சிரமமாக இருக்கும்.  இதற்கு முக்கியமான இன்னொரு காரணம் கிரஹப் பிரவேசத்திற்கான ஹோமத்தில் அமரும் தம்பதியர் ஹோமத்தின் போது வைத்து பூஜிக்கப்பட்ட கலசத்தில் உள்ள புனித நீரை புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து தளங்களிலும் சென்று மாவிலை கொண்டு தெளிக்க வேண்டும். எனவே 6 மாதத்திற்கு மேல் கர்ப்பமாக உள்ள பெண்கள் படியேறிச் செல்ல சிரமப்படுவார்கள் என்பது தான் உண்மையான காரணம். 

ஜோதிடர் கூடாது என்று சொல்வாரேயானால் குழந்தை பிறந்த பின்னர் கிரஹப் பிரவேசம் செய்யலாம் என்று சொன்னேன்.

அப்போது அவளது மகன் இங்கு இன்னும் எத்தனை நாள் தங்கி இருப்பீர்கள் என்று கேட்டான். அதற்கு நான் நாளை காலையில் இங்குள்ள ஒரு அலுவலகத்தில் வேலை முடிந்த பின்னர் மாலையில் சொந்த ஊருக்கு புறப்படுவேன் என்று சொன்னேன்.

அந்த நேரத்தில் மதிய உணவு தயாராகி விட்டபடியாலும் என்னவளுடன் தனியாக மனம் விட்டுப் பேசக் கூடய சந்தர்ப்பம் கிடைக்காததாலும்  அவர்களின் கோரிக்கையினை ஏற்று மதிய சாப்பாடு சாப்பிட்டவுடன் அங்கிருந்து புறப்படுவது என தீர்மானித்தேன்.

கைக்கு எட்டியது வாய்க்குக் எட்டவில்லை என்பது போல நான் அவளைச் சந்திக்கச் சென்ற சமயம் அவள் வீட்டில் இருந்தும் அவள் தனியாக என்னுடன் மனம் விட்டுப் பேச முடியாத நிலை நம் இருவருக்கும் ஏற்பட்டது.  காரணம் அவர்களின் விருந்தினர் முன்னிலையில் பேசுவதற்கு ஒரு சில வரையறைகள் கட்டுப்பாடுகள்.

மதிய உணவு அனைவரும் உட்கொண்டோம்.

தவளை தன் வாயால் கெடும் என்பது போல நானே ஒரு ஆலோசனை சொல்லி அது நமது உறவு நிலை நெருக்கத்துக்கு பாதகமாக அமைந்த படியால் பிரிய மனமில்லாது பேசவும் முடியாமல் வருத்தத்துடன் நான் அவளது இல்லத்திலிருந்து புறப்பட்ட சமயம் அவள் முகத்தில் பெருத்த சோகத்துடன் கலந்த ஏமாற்றம். 

எனக்கு உள்ளுர ஒரு பயம் தொற்றிக் கொண்டது. இப்போதே என்னவளுடன் தனியாக மனம் விட்டுப் பேச முடியவில்லை இன்னும் இவளது மருமகளின் வளர்ப்புத் தாயார் இங்கு வந்து இவர்களுடன் நிரந்தரமாக தரைத் தளத்திலேயே தங்கி விட்டால் நம் இருவருடைய நிலை என்னவாக இருக்கும்? நான் அடிக்கடி இந்த வீட்டிற்கு வந்தாலும் நம்மால் முன்னைப் போல சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க முடியுமா?

எனக்கும் அவளுக்கும் மூன்று ஆண்டுகள் வித்தியாசம். என்னுடைய 17-வது வயதில் அவளுக்கு வயது 14. அவள் பூப்பெய்து ஒரு சில நாட்களே ஆகியிருந்தன. அப்போது தான் நாம் இருவரும் முதன் முதலாகச் சந்தித்தோம். சந்தித்த முதல் நாளே அவளிடம் என் மனதை பறி கொடுத்து விட்டேன். அவளுக்கும் அதே நிலை. இரண்டு மூன்று நாட்களிலேயே எனக்கும் அவளுக்கும் கருத்து ஒற்றுமை உண்டாகி விட்டது. என்னுடைய விருப்பத்தினை அவளிடம் கூறி அவளும் அதனை ஒப்புக் கொண்டு அப்போது முதல் ஐந்து வருடங்கள் ஒரே காம்பவுண்டில் ஒரே ஊரில் இருந்து மிகவும் நெருக்கமாகக் காதலித்தோம்.

அவளை இல்லற வாழ்க்கையில் அடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இருவரும் கோவில்கள் அனைத்திலும் வழிபாடு செய்து மிக நெருக்கமாக இருந்தோம்.  நாம் இருவரும் எப்படியெல்லாம் திட்டமிட்டுக் கனவு கண்டோமோ அப்படியெல்லாம் நடந்து எனக்கு வெளியூரில் அரசாங்க வேலை கிடைத்து விட்டது. 

ஆனால் இல்லறத்தில் இணைய முடியாத நிலையிலும் நமது நெருக்கம் குறையாமல் கலாச்சாரக் கைதிகளாக அவ்வப் போது சந்தித்து நமது அன்பு குறையாமல் இருக்கின்றது என்பது எனக்கும் அவளுக்கும் ஆண்டவனால் கொடுக்கப் பட்ட வரம்.

எனக்கும் அவளுக்கும் பேரன் பேத்திகள் கிடைத்த பின்னரும் கூட நம்மிடையே உள்ள அன்பு நெருக்கம் மற்றும் காதல் குறையவில்லை. ஆனால் தற்போது நான் இரண்டு முறையே சந்தித்த ஒரு நபர் அவளுடன் கூடவே தங்குவதற்கு முதல் முறை சந்தித்த போது நானே அறிவுரை வழங்கி அந்த அறிவுறை நமது உறவின் விரிசலுக்கு காரணமாக அமைகின்றது என்பது போன்ற எண்ணம் எனக்கு உருவாகி விட்டது. காரணம் நான் அவளிடம் பேசச் சென்ற போது அவளைப் பேச விடாமல் அவளது உறவினர் பேசியது தான்.

புதிதாக கட்டப் போகும் வீட்டின் தரைத்தளத்தில் என்னவளுடன் சேர்ந்து அவர்கள் இருக்க முடிவு செய்து விட்ட காரணத்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் நம் இருவருக்கும் முன்பு போல மனம் விட்டுப் பேச முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. நான் அவளைப் பார்க்கச் செல்லும் சமயம் அவளது உறவினர் வேறு எங்காவது சென்றிருந்தால் மட்டுமே எனக்கு அவளுடன் தனியாக முன்பு போல சந்தோஷமாகப் பேசி நம் இருவரது சுக துக்கங்களைப் பரிமாறிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதனை விட இக்கட்டான நிலை அவளுக்கு. ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ள முடியவில்லை.

நான் கொடுத்த ஆலோசனை அவளை என்னிடமிருந்து பிரிக்கின்றது என்பதனனை நினைக்கும் போது எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. அவளுக்கு எப்படி இருக்கும்? என்பதனை நான் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

வழக்கம் போல் புறப்படும் சமயம் அவள் சோகமானாள். ஆனால் வெளிக் காட்ட முடியவில்லை. என்னவளின் மருமகள் நிலைமையை புரிந்து கொண்டு தனது மாமியாரை அழைத்துச் சென்றதைக் கண்ட எனக்கு இரண்டு உள்ளங்கள் என் பிரிவுக்காக வருந்துதற்கு நான் காரணமாகி விட்டேன் என்னும் எண்ணம் எனக்கு மட்டுமல்ல நம் இருவருக்கும் கவலையைத் தந்தது என்பதை மறுக்க முடியாது. 


ஞாயிறு, 1 ஜூலை, 2018

Loneliness in Palace / அரண்மனையில் தனிமை - கடல் கடந்த நாடுகளில் வாழ்வோரின் பெற்றோர் நிலை

அரண்மனையில் தனிமை

கடல் கடந்த நாடுகளில் வாழ்வோரின் பெற்றோர் நிலை

அவளைப் பார்க்க மீண்டும் அவளது இல்லத்திற்குச் சென்ற போது என்னவளும் என்னவளின் மருமகளும் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் அவளுக்கு மிகச் சந்தோஷம். அதனைவிட அதிகமான சந்தோஷம் அவளது மருமகளுக்கு. எனக்கு ஒரே ஆச்சர்யம்.

இருவரும் சேர்ந்து என்னை வரவேற்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

அவள் பேசுவதற்கு முன்னதாக அவளது மருமகள் என்னிடம் பேச ஆரம்பித்தாள். நீங்கள் வருவதற்கு முன்னர் ஒரே ஒரு முறை தகவல் தெரிவித்து விட்டு வர முடியுமா என்று கேட்டாள். அதற்கு நான் அலுவலக வேலையாகவோ அல்லது வேறு ஏதேனும் அவசர வேலையாகவோ திடீரென்று புறப்பட்டு வரும் சமயம் உங்கள் வீட்டிற்கு வருவதனால் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வர முடியவதில்லை.  

அதுவும் தவிர பலமுறை இந்த ஊருக்கு நான் வந்தாலும் சில தடவைகளில் மட்டும் தான் என்னால் இங்கு வர முடிகின்றது. பல முறை இங்கு வராமலேயே ஊருக்குத் திரும்பி விடுவேன்.  முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு வருவது என்பது என்னால் முடியாத காரியம் ஏனெனில் என் உத்தியோகம் அப்படி என்று சொன்னேன். வேண்டுமானால் மேலும் ஒன்றிரண்டு நாட்கள் அதிகமாக இந்த ஊரில் தங்க முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்றேன். 

அதற்கு அவளது மருமகள் இன்று மதியம் இங்கேயே மதிய உணவு உட்கொண்ட பின்னர் என்னுடைய அம்மாவை வரவைக்கின்றேன். முன்பின் அறிமுகமில்லாத அவர்கள் உங்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கின்றது என்றாள்.

அதன் பின்னர் என்னவளிடம் என்ன விவரம் என்று கேட்க நான் சொல்கின்றேன். மாலை வரையில் இங்கு இருக்க முடியுமா என்று மட்டும் தற்போது என் மருமகளிடம் சொல்லி விடுங்கள் என்று கேட்டாள். நானும் சரியென்று ஒப்புக்கொண்டேன். உடனே அவளது மருமகள் அவளது அம்மாவிற்குப் போன் செய்து உடனடியாக புறப்பட்டு வருமாறு தகவல் தெரிவித்தாள்.  அதன்பின்னர் அவளது மருமகள் எனக்காக சிறப்பு உணவு தயாரிக்கப் போவதாகக் கூறி சமையலறைக்குள் சென்று விட்டாள்.

சற்று நேரத்தில் அவளது மருமகள் ஒரு பெரிய டம்ளரிலும் ஒரு சிறிய டம்ளரிலும் காப்பி கொண்டு வந்து என்னிடம் பெரிய டம்ளரைக் கொடுத்தாள். நான் உனது மாமியாருக்கு இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவள் நீங்கள் எப்படியும் பாதி கொடுக்கப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் எப்படியெனில் சென்ற முறை தாங்கள் பாதி குடித்து விட்டு மீதியை என் மாமியார் அருந்தும் சமயம் பார்த்து விட்டேன். அதனால் தான் பெரிய டம்ளர் என்றாள். அப்போது நான் என்னவளைப் பார்த்த போது நமது விஷயம் அவளுக்கு தெரிந்து விட்ட படியால் எதனையும் மறைக்க முடியவில்லை. அதன்பின்னர் என்னிடம் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டாள். என்னால் என் அன்பு மருமகளிடம் எதனையும் மறைக்க முடியவில்லை. மறைக்க விருப்பமும் இல்லை.  எனக்கு எப்படி தாய் தந்தை இல்லையோ அது போல அவளுக்கும் தாய் தந்தை கிடையாது. அது தான் நம்மிடையே உள்ள ஒற்றுமை என்று சொன்னாள்.  நானும் அவளும் காப்பி குடித்த பின்னர் பேச ஆரம்பித்தோம்.

என் மருமகளுக்கு தாயார் கிடையாது. தந்தை ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்து வந்தார். அவரும் திடீரென மாரடைப்பு வந்து காலமாகிவிட்ட படியால் தந்தை வேலை செய்த வீட்டிலேயே தங்கி படித்து முடித்த பின்னர் அவர்களே என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என் மருமகள் வளர்ப்புப் பெண்ணாக வளர்ந்த வீட்டில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றது ஆனால் உண்மையான அன்பு, அரவணைப்பு, பாசம் ஏதும் இல்லாமல் குடும்பத் தலைவி மட்டும் தனியே இருந்து வருகின்றார்கள் என்று சொன்னாள்.

அந்த நேரத்தில் நான் அருகில் இருக்கும் என்னுடைய நண்பன் வீட்டிற்குச் சென்று வந்து விடுகின்றேன் என்று சொன்னதற்கு அவளது மருமகள் நீங்கள் எங்கும் செல்லக் கூடாது.  ஏனெனில் எங்காவது போய் வந்த பின்னர் அவர்கள் வீட்டில் சாப்பிட்டேன் என்று சொல்வீர்கள் எனவே நீங்கள் இன்று இரவு வரை இங்கு தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டாள். உடனே என்னவள் பார்த்தீர்களா உங்களுக்கு எங்கள் வீட்டில் வரவேற்பு பல மடங்கு பலமாகி விட்டது என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

ஆமாம் அவளது மகள் என்னை பிறந்தது முதல் பாபா பாபா என்று தான் அழைக்கின்றாள். முதல் மருமகள் தனது காதல் திருமணத்தை நடத்தியமைக்காக என்னை அன்புடன் குடும்பத்தில் உள்ள உறுப்பினர் போல கவனிக்கின்றாள். இரண்டுக்கும் மேலாக இந்த மருமகளது இரட்டிப்பு அன்பு, பன்மடங்கு பாசம் சற்று அதிகார தோரணை மற்றும் கண்டிப்புடன்.

இதுவரையில் நான் அவளது மருமகள் குடும்பம் பற்றி எதுவும் கேட்டதில்லை. அவளது பெற்றோர் யார் எந்த ஊர் என்னும் விவரம் எதுவும் கேட்கவில்லை.

அப்போது கார் சத்தம் கேட்டது. உடனே என்னவளும் அவளது மருமகளும் வேகமாகச் சென்று வந்தவரை வரவேற்றார்கள். அப்போது அவர் வந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் நான் எப்போது வந்து திரும்ப அழைக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது நான் திரும்ப செல்லும் சமயம் வேறு ஒரு கார் பிடித்துக் கொள்கின்றேன். காத்திருக்க வேண்டாம் என்று வந்த டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

மீண்டும் ஒரு முறை வந்தவருடன் சேர்த்து எனக்கும் காப்பி வந்தது. அப்போது மாத்திரம் நான்கு பேர் தனித்தனி டம்ளர்களில் காப்பி குடித்தோம்.

அதன் பின்னர் வந்தவர் பேச ஆரம்பித்தார். 

உங்களுக்கு காப்பி கொடுத்து பிரியமுடன் தற்போது கவனித்து வரும் பெண் என் வளர்ப்பில் உருவானவள். நான் இவளைப் பெற்றெடுத்த தாய் அல்ல. அவளது தாயார் அவள் 6-ம் வகுப்பில் படிக்கும் சமயம் காலமாகி விட்டார்.

இந்தப் பெண்ணின் தந்தை எங்கள் வீட்டில் பணியாற்றி வந்தார். தாயார் இல்லாத காரணத்தால் இவளை என்னுடைய வீட்டிலேயே தங்கி படிக்குமாறும் இவளது தந்தையையும் எங்களுடன் தங்குமாறும் கேட்டுக் கொண்டேன். இவளும் இவளது தந்தையும் இருப்பதற்கு ஒரு தனி அறை ஒதுக்கீடு செய்து அங்கு இருப்பார்கள். எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று வந்தாள்.


https://myloverismyangel.blogspot.com/2018/07/loneliness-in-palace.html


இந்தப் பெண்ணின் தந்தை திடீரென மாரடைப்பு வந்து இறந்து விட்டார். அப்போது உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இவளைப் பார்ப்பது எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. இவள் தந்தையை இழந்து வருத்தப்படும் அதே சமயம் இந்த சின்ன வயதில் இவளுக்கு எந்த உறவுகளும் இல்லாமல் இருக்கின்றாளே என்று இவளது நிலைமையினை நினைத்து இவளை விட நான் அதிகமாக வருத்தப்படுவேன்.

இந்த நிலையில் இவளை எனது வளர்ப்பு மகளாக தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்கு எனது மகன்கள் ஆதரவு தெரிவித்தாலும் அவர்களுக்கு வந்த மனைவிகள் அதாவது எனது மருமகள்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே என் வீட்டிலேயே தங்கி கல்லூரிப் படிப்பு முடியும் வரை நானே பார்த்துக் கொண்டேன். 

அதன் பின்னர் திருமண ஏற்பாடுகள் செய்து என் கண் குளிர பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் மழை வெள்ளம் போன்றவை ஏற்பட்டதாலும் வேறு காரணங்களாலும் மாற்று தேதி குறித்து மிகவும் சிக்கனமாக திருமணம் நடத்த வேண்டியதாயிற்று. இந்த விவரங்கள் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார்கள்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளுக்குப் பதிலாக வேறு நாளில் நடந்தேறியது என்பது மட்டும் தான் எனக்கு தெரியுமே தவிர வேறு விபரங்கள் எதுவும் எனக்கு சொல்லவில்லை என்று தெரிவித்தேன்.

திருமணத்திற்குப் பின்னர் நீங்கள் இந்த வீட்டிற்கு வந்து சென்றதனையும் உங்களுடைய அறிவுறைகளின் படி இந்த குடும்பம் நடந்து கொள்வதையும் என்னுடைய வளர்ப்புப் பெண் கூறியதால் நான் உங்களிடம் நிறையப் பேச வேண்டும் என்று சொன்னேன்.  அதனால் தான் இன்று என்னை அவசர அவசரமாக இவள் அழைத்து நான் உங்களிடம் சில ஆலோசனைகள் கேட்பதற்காக வந்து இருக்கின்றேன் என்று சொன்னார்கள். 

நானும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் சொல்வதை பொறுமையாகக் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார்.

இதற்கு இடையில் அவளது மருமகள் அவளது கணவரிடம் அதாவது என்னவளின் இரண்டாவது மகனிடம் சொல்லி என் அம்மா வந்து இருக்கின்றார்கள் உடனே புறப்பட்டு வாருங்கள் எனக் கூற அவனும் வந்து விட்டான். அவன் வந்தவுடன் அனைவரும் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சாவகாசமாக உட்கார்ந்து பேசலாம் என்று கூற அனைவரும் சாப்பிட்டு முடித்தோம்.

அதன் பின்னர் அனைவரும் அமர்ந்து பேசும் சமயம் என்னவளின் இரண்டாவது மருமகள் அழைப்பின் பேரில் வந்தவர் பேச ஆரம்பித்தார்.

என் கணவர் பழைய பர்மா நாட்டிலிருந்து மரங்கள் வரவழைத்து விற்பனை செய்து வந்தார். எனக்கு நான்கு மகன்கள். பெண் குழந்தை கிடையாது. நான்கு பேரும் நன்றாகப் படிப்பவர்கள். எனவே எனது கணவர் அவர்களை தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்தார். 

கொடைக்கானல் மற்றும் ஊட்டியிலுள்ள தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்த காரணத்தாலோ என்னவோ அவர்களுக்கு வெளிநாட்டு மோகம் தலை தூக்கி விட்டது. படித்து முடிந்தவுடன் முதல் மகன் அமெரிக்கா சென்று விட்டான். இரண்டாவது மகன் லண்டன் சென்று விட்டான். மூன்றாவது மகன் சிங்கப்பூர் சென்று விட்டான். நான்காவது மகன் துபாய் சென்று விட்டான். அச்சமயம் தமது குழந்தைகள் நல்ல வேலைக்குச் சென்று விட்டதால் இனிமேல் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று வணிகத்தை நிறுத்தி விட்டு சுகவாசியாக இருந்தார்.

எனக்குப் பிறந்த பிள்ளைகள் இந்தியாவில் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கி படித்தார்கள். படித்து முடித்தவுடன் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார்கள். நான் அதிக நேரம் கூடவே இருந்து பேசிக்கொண்டிருந்தது இந்தப் பெண்ணிடம் மட்டுமே என்று அவர் சொல்லும் சமயம் அவரது கண்களில் நீர் வழிந்தது.



https://myloverismyangel.blogspot.com/2018/07/loneliness-in-palace.html


திடீரென என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாது போகவே தமது மகன்கள் அனைவரையும் ஒரு சேரப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அனைவருக்கும் வருமாறு அழைப்பு விடுத்தோம். ஒருவர் கூட வரவில்லை.

திடீரென ஒரு நாள் காலையில் எழுந்து பார்க்கும் போது அவரது உயிர் பிரிந்து இருந்தது. உடனடியாக அனைவரையும் அழைத்தும் சிங்கப்பூரில் உள்ள ஒரு மகன் தான் வந்து கொள்ளி வைத்தான். அவன் கூட 16 நாட்கள் காரியம் முடியும் வரை இருக்க முடியாது என்று சொல்லி விட்டு நான்காவது நாளே புறப்பட்டு விட்டான். என் கணவர் தமது புதல்வர்களை கடைசி காலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டும் அவரால் யாரையும் காண முடியாத ஏக்கத்துடன் அவரது உயிர் பிரிந்தது.

அதன் பின்னர் இவளை தத்து எடுக்க முடிவு செய்ததற்கு அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. இவளை வளர்ப்பு மகளாக எடுக்க முடியாமல் வளர்ப்புப் பெண்ணாக மட்டும் வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்தேன்.

எனக்குள்ள ஒரே கவலை என்னுடைய மரணத்தின் போதாவது என்னுடைய மகன்கள் அனைவரும் ஒன்று கூடி எனக்கு காரியம் செய்வார்களா என்பது தான் என்று வருந்தினாள்.

நான் மட்டும் இங்கு தனியாக இருப்பதற்கு பிடிக்கவில்லை. எனவே என்னையும் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்று நான் எனது பிள்ளைகளிடம் கேட்டு விட்டேன்.

அதற்கு அவர்கள் நாங்கள் இந்தியா வந்தால் தங்குவதற்கு ஒரு இருப்பிடம் வேண்டும். அதனைப் பாதுகாக்க நீங்கள் இங்கு தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். வேண்டுமானால் வருடத்தில் 15 நாட்களோ அல்லது ஒரு சில மாதங்களோ அங்கு வந்து எங்களுடன் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றார்கள். ஆக மொத்தத்தில் நான் என் கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்திற்கு எஜமானியாக இல்லாமல் வாட்ச்மேன் என்னும் அந்தஸ்த்தில் தான் இருந்து வருகின்றேன்.


நான் தனிமையில் இருப்பதால் நான் அகால மரணம் அடைந்தாலோ அல்லது என்னை யாராவது கொலை செய்தாலோ கூட அந்த விவரம் உடனே வெளியில் தெரியாது என்று மிகவும் வருத்தப்பட்டார்கள்.

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இவ்வளவு காசு பணம், சொத்து சுகம், சொந்த பந்தம், வாரிசுகள் இருந்தும் நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தனிமையாக இருப்பது என்பது மிகப் பெரிய சோகம் தான். அதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை. அயல் நாட்டு மோகம் கொண்ட பல குடும்பங்களில் இந்த சோகம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அவர்கள் வெளியில் சிரித்துக் கொண்டும் உள்ளே அழுது கொண்டும் தான் இருக்கின்றார்கள். 

திருமணம் போன்ற விசேஷங்களில் புதுமணத் தம்பதிகளுடன் குரூப் போட்டோ எடுக்கும் சமயம் சில குடும்பத்தினர் 10 பேர் அல்லது 15 பேர் என நின்று கேமராவிற்கு சிரித்துக் கொண்டே போஸ் கொடுப்பார்கள். ஆனால் அயல் நாடுகளுக்குப் பிளளைகளை அனுப்பி வைத்த குடும்பத்தினர் முழுக் குடும்பமும்  இல்லையே என்னும் வருத்தத்துடன் இருப்பார்கள். அவர்கள் முதத்தில் மாத்திரம்  உண்மையான சந்தோஷம் இருக்காது.

நான் அவர்களிடம் கேட்டதிலிருந்து அவர்கள் அரண்மனை போன்ற பெரிய வீட்டில் கார் பங்களா வசதியுடன் தனிமையாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டேன்.

அதன் பின்னர் நான் என்னவளின் சம்மதத்துடன் அவளது சம்மந்தியுடன் பேச ஆரம்பித்தேன். 

இராமாயணத்தில் ராமன் லெட்சுமணன் சத்ருக்னன் பரதன் ஆகிய நான்கு மகன்களுக்கும் தந்தை தசரதச் சக்ரவர்த்தி. மூன்று மனைவிகளும் உண்டு.

தசரதச் சக்ரவர்த்தி தாம் சிறு பிள்ளையாக இருக்கும் சமயம் வேட்டையாடச் சென்ற போது தண்ணீர் குடிப்பது போல ஓசை கேட்ட படியால் யானை தான் தண்ணீர் குடிக்கின்றது என்று நினைத்து தன்னுடைய அம்பினைச் செலுத்துகிறார். ஆனால் சிரவணன் என்னும் சிறுவன் குவளையில் தனது கண்கள் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோருக்காக சரயு நதிக் கரையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தான். குவளையில் தண்ணீர் நிரப்பும் ஒலியினை யானை தண்ணீர் அருந்துவதாக எண்ணி அம்பு எய்திய காரணத்தினால் சிரவணன் உடலில் அம்பு பாய்ந்து இறக்கும் தருவாயில் என்னுடைய கண் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோர் தண்ணீருக்காக தாகத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி தண்ணீர் கொடுத்து தாகம் தீர்க்குமாறு கேட்டு உயிர் விடுகின்றான். சிரவணன் கேட்டுக் கொண்டபடி தசரதன் அவனது பெற்றோருக்கு குவளையில் நீர் கொண்டு சென்ற சமயம் கண் தெரியாத வயது முதிர்ந்தவர்கள் “நாங்கள் இருவரும் எங்கள் ஒரே மகனை இழந்து எப்படி என்ன செய்வதென்று அறியாமல் எங்கள் கடைசிக் காலத்தில் தவிக்கின்றோமோ அதே போல நீ ஒரு அரசனாக இருந்தாலும் உனது உயிர் பிரியும் சமயம் உன்னுடைய புத்திரர்கள் உன்னை விட்டுப் பிரிந்து புத்திர சோகத்தில் இருப்பாய்” என்று சபித்து விடுவதோடு மட்டுமல்லாமல் தங்களது மகன் சிரவணனை எரிக்கும்  அந்த சிதையிலேயே விழுந்து உயிர் விடுகின்றனர்.

தசரதன் சிறு பிள்ளையாக இருக்கும் போது சிரவணனின் கண் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோர் கொடுத்த சாபத்தால் ஒரு சாம்ராஜ்யத்திற்கு சக்ரவர்த்தியாக இருந்தும் நான்கு புதல்வர்கள் இருந்தும் சாகும் தருவாயில் இராமன் பிரிந்த புத்திர சோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாயிற்று.

ஜாதகங்களில் வம்சாவழி ஜாதகம் என்று உண்டு. மாதவி வம்சாவழி ஜாதகம் உள்ளோருக்கு இரண்டாம் தாரமாகத் தான் வாழ்க்கைத் துணை அமையும். இராமன் வம்சாவழி ஜாதகம் உள்ளோர் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் ஏக பத்தினி விரதத்துடன் இருப்பார்கள். கிருஷ்ணன் வம்சாவழி ஜாதகம் படைத்தோர் கோபிகாஸ்திரிகளுடன் விளையாட்டாக எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள். சீதை வழி ஜாதக அமைப்பு கொண்டோர் கணவர் எங்கு சென்றாலும் கூடவே சென்று வாழ ஆசைப்படுவார்கள். அது போன்ற காரணங்களால் தான் கடவுள்களின் ஜாதகத்தினை பூஜை அறையில் வைக்கின்றோம்.

உங்கள் கணவரது ஜாதகம் தசரதர் வம்சாவழி ஜாதகம் எனவே தான் கடைசி காலத்தில் புத்திர சோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாயிற்று.

என்னுடைய அனுமானத்தின் படி உங்களது புத்திரர்கள் வெளி நாடுகளில் வேலை செய்து எவ்வளவு சம்பாதித்தாலும் இந்தப் பெண்ணை தத்து எடுத்து வளர்ப்பு மகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்வதிலிருந்து அவர்கள் உங்கள் மீது காட்டும் அக்கரையினை விட பூர்வீக சொத்தின் மீது தான் அதிக ஆசை வைத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. ஏனெனில் இந்தப் பெண்ணை தத்து எடுத்தால் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அது தான் உண்மை.

இந்தப் பெண்ணை தத்து எடுத்து இருந்தால் திருமணம் செய்து வைத்து வீட்டோட மாப்பிள்ளையாக இவளது கணவரையும் சேர்த்து உங்களுடன் தங்க வைத்து இருப்பீர்களேயானால் இந்தப் பெண்ணின் தந்தை இருந்த இடத்தில் இந்தப் பெண்ணின் கணவர் தங்குவதால் ஒரு ஆண் துணையும் அந்த வீட்டில் கிடைத்து இருக்கும். பாது காப்பாகவும் இருந்திருக்க முடியும்.

இந்த நிலையில் உங்களுக்கு மன நிம்மதியும் நல்ல கவனிப்பும் தேவை. எனவே நீங்கள் உங்களது மகன்கள் மீது அக்கறை செலுத்துவதை விட இவள் மீது அக்கரை செலுத்தி இவளுக்கு அருகிலேயே இருப்பது நல்லது.  

இவர்கள் புதிதாக வீடு கட்டப் போகின்றார்கள். உங்களுடைய பெயரில் ஒரு வீட்டினை சொந்தமாக வாங்கும் அளவிற்கு பணம் உங்கள் கைவசம் இருந்தால் அந்த பணத்தைக் கொண்டு அந்த வீட்டிற்கு அருகிலேயே இன்னொரு வீட்டினை வாங்கி அந்த இடத்தில் குடிவந்து இருந்தால் உங்களுக்கு நல்ல கவனிப்பு கிடைக்கும்.  உங்களது பிள்ளைகள் விருப்பப்பட்டால் அந்த வீட்டினை இவளுக்குக் கொடுக்கலாம் அல்லது உங்கள் உயிர் பிரிந்த பின்னர் பிள்ளைகள் எடுத்துக் கொள்ளட்டும். அந்த விவரம் உங்களுக்குத் தெரியப் போவது இல்லை.

இதற்கு அடுத்த படியாக உங்களிடம் கொஞ்சம் தான் பணம் இருக்கின்றது எனில் ஒரு வீட்டினை ஒத்திக்குப் பிடித்து இவர்கள் அருகில் இருக்கலாம். 

அதுவும் இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட தொகையினை புதிதாக வீடு வாங்கப் போகும் இவர்களிடம் கொடுத்து ஒத்திப் பணமாக வைத்துக் கொள்ளச் சொல்லி கேட்டுக் கொண்டு இவர்கள் கட்டும் வீட்டின் ஒரு பகுதியில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம். 

உங்களுடைய மகன்கள் மாதாமாதம் பணம் அனுப்பி அதனை எப்படி செலவு செய்தீர்கள் என்று கேட்கும் நிலையில் உங்கள் மகன்களின் மன நிலை இருக்குமானால் நீங்கள் இவர்கள் கட்டி குடியேறப் போகும் ஒரு அறைக்கு வாடகையாக கொடுத்து நீங்கள் எப்போதெல்லாம் பிரியப் படுகின்றீர்களோ அப்போதெல்லாம் வந்து இவர்கள் அருகில் இருந்து விடலாம். அடிக்கடி இருவரும் விருந்துகள் வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம். 

நீங்கள் உங்கள் மகன்களுக்கு அருகில் கடைசி காலத்தில் இருக்க வேண்டும் என்பதனை மறந்து விட்டு கடைசி காலம் வரையில் நீங்கள் தத்து எடுத்து வளர்க்க ஆசைப்பட்ட இந்தப் பெண்ணுக்கு  அருகிலேயே இருப்பது நல்லது என்பது என்னுடைய ஆலோசனை.

இந்த குடும்பத்தினர் எனக்கு வேண்டியவர்கள் என்பதால் இவ்வாறான யோசனை நான் கொடுக்கின்றேன் என்று தயவு செய்து தவறுதலாக எண்ணி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன்.

உங்களது தற்போதைய நிலை அரண்மனைத் தனிமை. அதாவது அரண்மனை போன்ற வீடு இருந்தும் தனியாக வாழ வேண்டிய அவல நிலை.

தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் கூட உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர மாட்டார்கள். அவர்களுக்கு எப்போது விடுமுறை கிடைக்கின்றதோ அல்லது அவரவரது மாமனார் சொந்தங்களில் எப்போது விசேஷங்கள் வருகின்றதோ அப்போது அவரவர் இஷ்டப்படி வந்து தங்கி விட்டு இந்த ஊரில் மாசு அதிகமாக உள்ளது, சுத்தமாக இல்லை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது, சீதோஷ்ன நிலை ஒத்துக் கொள்ளவில்லை என்று ஏதேனும் ஒரு சாக்கு சொல்லி உடனே திரும்பி விடுவார்கள். இதனால் கூட்டுக் குடும்பமாக சந்தோஷமாக அனைவரும் ஒன்று கூடவே முடியாது என்று சொன்னேன்.

அவர்களால் எதுவும் பேச முடியவில்லை. உடனே அவர் தமது சம்மந்தி அதாவது என்னவளிடம் நான் 5 லட்சம் அல்லது 10 லட்சம் கொடுக்கின்றேன். தயவு செய்து எனக்கு இவர் சொன்னது போல ஒரு அறையினையோ அல்லது ஒரு போர்ஷனையோ ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.  உடனே மூவரும் சேர்ந்து ஒப்புக் கொண்டனர்.

அதன் பின்னர் நான் நாளை காலையில் இங்கிருந்து புறப்படுகின்றேன் நீங்கள் மூவரும் சேர்ந்து இவரையும் என்னுடன் அழைத்து வாருங்கள் என் வீட்டில் எனக்குத் துணையாக இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஓரிரு வார காலம் தங்கியிருந்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி விடலாம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு என்னவளின் மகன் நான் அலுவலகத்தில் லீவு போட முடியாது எனவே நான் ஞாயிற்றுக் கிழமையன்று வருகின்றேன். நாம் அனைவரும் ஒன்றாக புறப்படலாம் என்று சொன்னான். அதற்கு அவர்கள் நான் எப்போதும் தனிமையில் இருக்கின்றேன் எனவே தான் அனைவரும் வந்து என்னுடன் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதன்படி என்னவளும் அவளது மருமகளும் மாத்திரம் அவருடன் செல்வது என்று தீர்மானித்தார்கள். என்னையும் அழைத்த காரணத்தால் வீடு எங்கே இருக்கின்றது என்று கேட்டதற்கு காஞ்சிபுரம் என்று சொன்னவுடன் தான் எனக்கு அந்த விவரமும் தெரிய வந்தது.

நான் அவர்களிடம் விடைபெறும் சமயம் அந்த குடும்பத்தார் அனைவரும் மனமில்லாது வழியனுப்பி வைத்தார்கள். என்னவளின் நிலையும் எனது நிலையும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாதபடி உள்ளத்தில் அழுகை உதட்டினில் சிரிப்பு.

வெள்ளி, 29 ஜூன், 2018

Prayers for purchase of own house property / சொந்த வீடு வாங்கும் பாக்கியம் பெற செய்ய வேண்டிய வழிபாடுகள்

சொந்த வீடு வாங்கும் பாக்கியம் பெற செய்ய வேண்டிய வழிபாடுகள்


https://myloverismyangel.blogspot.com/2018/06/prayers-for-purchase-of-own-house.html



எனது தேவதையின் மகன் திருமண பத்திரிக்கையினை கொடுத்து அழைக்க எனது வீட்டிற்கு வந்த சமயம் நான் எனது உறவினர் இல்ல திருமணத்திற்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். எனது குடும்பத்தார் கல்யாண மண்டபத்திலேயே இருந்தனர். மாலை மற்றும் இரவு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் தான் வீடு திரும்புவார்கள்.

அவளது மகன் எனது வீட்டு விலாசத்தினை கையில் வைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருந்தான். நான் சரியாக அந்த நேரத்தில் எனது வீட்டிற்கு திரும்பி அவனை எனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று திருமண பத்திரிக்கை பெற்றுக் கொண்டு சுவீட் காரம் கொடுத்து பின்னர் குளிர் பானம் கொடுத்தேன். ஆர்வமுடன் என்னை கட்டாயம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று  கேட்டுக் கொண்டான். நானும் சரியென்றேன்.

எனது குடும்பத்தாரை இதுவரையில் அவன் பார்த்திராத காரணத்தால் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். எனது குடும்பத்தாரை காண முடியாதது அவனுக்கு ஏக்கம். அவன் என் குடும்பத்தார் கண்ணில் படாதது எனக்கு சந்தோஷம்.

வழக்கம் போல் ஏற்கனவே நம்மிடையே உள்ள புரிதலின்படி திருமண பத்திரிக்கையில் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் 4 மாதங்கள் கழித்து அவளது வீட்டிற்குச் சென்றேன்.

நான் சென்ற சமயம் அவளும் அவளது மருமகளும் இருந்தார்கள். அப்போது அவள் தனது மருமகளிடம் என்னை அறிமுகப்படுத்தி விட்டு எனக்கு பானம் கொண்டு வருமாறு கூறினாள். அவளது மருமகள் சமையலறைக்குச் சென்றவுடன் என்னிடம் திருமணம் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

என்னுடைய மகனுடைய திருமண நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக திடீர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமண மண்டபங்கள் அனைத்திலும், வீடுகளில் வெள்ளம் புகுந்தோர் தங்க வைக்கப்பட்டமையால் அன்றைய தினம் திருமணம் நடத்த முடியவில்லை. எனவே அதற்குப் பின்னர் மீண்டும் ஒரு தேதி குறித்து திருமணப் பத்திரிக்கை மீண்டும் அச்சடிக்காமல் மிகவும் முக்கியமானவர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு திருமண நிகழ்ச்சி எளிதாக முடிக்கப்பட்டது என்று சொல்லி எனது முதல் மகளை இரயில் பயணத்தின் போது நடுவழியில் உள்ள ஊரில் ஈன்றெடுத்தேன். அதே போல இவனது கல்யாணத்தை சற்றும் எதிர்பாராத படி வேறு வழியில் சிக்கனமாக நடத்த வேண்டியதாயிற்று என்று கண் கலங்கினாள்.

அவளது மருமகள் இரண்டு டம்ளர்களில் காப்பி கொண்டு வந்தாள். அதற்கு அவள் அவருக்கு ஒரு டம்ளர் கொடுத்து விட்டு நீ ஒரு டம்ளர் காப்பி குடித்து விடு எனக்கு வேண்டாம் என்று சொன்னாள். அவளும் சரியென்று சொல்லி உள்ளே சென்ற சமயம் நானும் அவளும் வழக்கம் போல் அவள் மருமகளுக்குத் தெரியாமல் பாதி பாதி குடித்தோம்.

சற்று நேரத்தில் அவளது மகன் உள்ளே நுழைந்தான். அவனும் தன் பங்கிற்கு திருமண களேபரங்கள் பற்றி தெரிவித்தான். நான் கொண்டு சென்று இருந்த திருமண பரிசுப் பொருளினை புது மணத் தம்பதியினரிடம் கொடுத்தேன். அவள் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ளச் சொன்னாள். அதற்கு அவளது மகன் நீயும் கூட இவருடன் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வாதம் செய் என்று சொன்னவுடன் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவர்களை ஆசீர்வதித்தோம் வாழ்க்கையில் முதன்முறையாக நாம் இருவரும் சேர்ந்து.

அதன் பின்னர் அவள் தனது மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து என்னிடம் வீடு வாங்குவது பற்றி ஆலோசனை கேட்க ஆரம்பித்தாள்.

சொந்த வீட்டினை விற்று வந்த பணத்தினை இரண்டு மகன்கள் மற்றும் மகளுக்குக் கொடுத்தேன். அதனைக் கொண்டு பெரிய மகன் தனது மாமனார் கொடுத்த இடத்தில் வீடு கட்டிக்கொண்டு போய் விட்டான். 

இவனிடம் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு சிறிய பட்ஜெட்டில் வீடு வாங்கலாம் என்று முயற்சிக்கின்றோம் ஆனால் முடியவில்லை.

சென்ற முறை சென்றது போல ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் சென்று காட்டினோம் என்று கூறிவிட்டு ஜோதிடர் என்ன சொன்னார் என்பதனை நீ சொல் என்று தனது பையனிடம் சொன்னாள்.

அதற்கு அவன் ஒவ்வொருவருடைய ஜனன காலத்தில் லக்னத்திலிருந்து நான்காம் வீட்டைக்கொண்டு அவருக்கு வீடு மனை வாங்கும் யோகம் பற்றி அறியலாம் எனவும் 4ம் வீட்டில் எத்தனை சுப கிரகங்கள் அமைந்தாலும் 4ம் வீட்டை எத்தனை சுப கிரகங்கள் பார்வை செய்தாலும் 4ம் அதிபதியுடன் எத்தனை சுபகிரகங்களின் சேர்க்கை இருந்தாலும் அத்தனை வீடு மற்றும் மனை வாங்கும் யோகங்களானது அமையும் என்று ஜோதிடர் கூறினார் எனவும் தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருப்பதால் வீடு அமையும் யோகம் சற்று தள்ளிப்போகும் என்றும் தெரிவித்தார். நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டுமெனில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இரண்டு கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அது தவிர புத்தி, திசை என்றெல்லாம் நிறையச் சொன்னார் அவற்றை என்னால் மீண்டும் நினைவு படுத்தி தெளிவாகச் சொல்ல முடியவில்லை என்று அவளது மகன் என்னிடம் தெரிவித்தான்.

ஜோதிடர் எங்கள் அனைவரது ஜாதங்களையும் அலசி ஆராய்ந்து சொந்த வீடு அமைய சுக்கிர ஓரையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிவுறை சொன்னார் எனவும் தெரிவித்து மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் வந்த பின்னர் தங்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்று தான் காத்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள்.

நான் என்னவளிடம் திருமணத்திற்கு முன்னர் திருப்பதி மற்றும் காளஹஸ்தி சென்று வந்தீர்கள். திருமணம் ஆன பின்னர் திருப்பதி சென்று வந்தீர்களா என்று கேட்டேன். மூவரும் சேர்ந்து ஒரே குரலில் இல்லை என்று பதில் சொன்னார்கள். அதன் பின்னர் வீடு வாங்குவது பற்றி நான் அவர்களுக்கு அறிவுறைகள் சொல்ல ஆரம்பித்தேன்.

https://myloverismyangel.blogspot.com/2018/06/prayers-for-purchase-of-own-house.html


https://myloverismyangel.blogspot.com/2018/06/prayers-for-purchase-of-own-house.html


கடற்கரை மணலில் வீடு கட்டி  விளையாடுவோம். ஆற்றுமணலை எங்காவது வீட்டின் அருகே வீடு கட்டுவதற்காக கொட்டி வைத்து இருப்பார்கள் அல்லது திருவிழாக்களின் போது ஆற்று மணல் கொட்டி வைப்பார்கள். அவ்வாறான ஆற்று மணலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஈரப்பதம் ஏற்படுத்திவிட்டு நாங்கள் (என்னவளைப் பார்த்துக் கொண்டே) சின்னஞ்சிறு வயதில் மணல் வீடு கட்டி  அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவோம். அது கற்பனை அல்ல. அது வேடிக்கை அல்ல. அது விளையாட்டு அல்ல. நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் சொந்தமாக வீடு கட்டி வசதியாக வாழ வேண்டும் என்பதற்கான எதிர்காலத்திற்கான திட்டமிடல் தான் நம் முன்னோர்களால் மணல் வீடு கட்டும் விளையாட்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டது.



https://myloverismyangel.blogspot.com/2018/06/prayers-for-purchase-of-own-house.html


அதே போல் ஒரு பெரிய கல்லை வைத்து (அஸ்திவாரம்) அதன் மீது அதனை விட சிறிய கல் ஒன்றை வைத்து (இருப்பிடம்) அதன் மீது அதனை விட சிறிய கல் ஒன்றை வைத்து (மொட்டை மாடி அல்லது மேற்கூரை) விளையாடுவோம். அதுவும் நம் முன்னோர்களால் மேலே சொன்னபடி உருவாக்கப்பட்ட விளையாட்டு அதாவது எதிர்காலத் திட்டமிடல்.

பல புண்ணிய ஸ்தலங்களில் இவ்வாறாக மூன்று கற்கள் அல்லது நான்கு கற்கள் அல்லது ஐந்து கற்கள் கிரிவல மலைப் பாதைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அவை அங்த கோயில்களுக்கு வரும் பக்தர்களால் தமக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்பதற்கான வழிபாட்டு வேண்டுதல்கள்.

அதே போல பல புண்ணிய ஸ்தலங்களில் கீழேயிருந்து தம்மால் முடிந்த அளவு ஒரு கல்லை எடுத்துக் கொண்டு போய் மலை உச்சியில் உள்ள கோயிலில் சேர்ப்பார்கள். அதுவும் வீடு கட்ட வேண்டி நாம் மேற் கொள்ளும் ஒரு வகையான  பிரார்த்தனை. உதாரணம் சபரி மலை செல்லும் பக்தர்கள் பம்பை நதியிலிருந்து கல் கொண்டு சென்று கல்லிடும் குன்றில் வைப்பது.

https://myloverismyangel.blogspot.com/2018/06/prayers-for-purchase-of-own-house.html


தற்போது மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் மாதிரி வீடுகள் செய்து கொண்டு வருமாறு பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் சொல்வதும் அவ்வகையான ஒரு தூண்டுதல்களின் வெளிப்பாடேயாகும்.

சரி.  நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்.

ஒரு வீட்டு மனை என்பது ஐந்தரை செண்டு பரப்பளவு உள்ள நிலம். அதாவது 60 அடி நீளம் 40 அடி அகலம் கொண்டது. இந்த மனையினை நமது பெயருக்கு வாங்க வேண்டும் என்றால் நமக்கு ஜாதகப்படி யோகம் இருக்க வேண்டும். ஜாதகத்தில் தற்போது அந்த யோகம் இல்லை. அவ்வாறான ஜாதக அமைப்பு உடையவர்கள் தனியாக இடம் வாங்கி அதில் வீடு கட்டுவதற்கு பதிலாக அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பகுதியினை வாங்க முடியும்.

உதாரணமாக 60 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட மனையின் பரப்பளவு 2400 சதுர அடியாகும். இரண்டு பேர் சேர்ந்து வாங்கினால் ஒருவர் பெயரில் 1200 சதுர அடி மட்டுமே பதிய முடியும். மூன்று பேர் சேர்ந்து வாங்கினால் 800 சதுர அடி மட்டுமே பதிய முடியும். இதே இடத்தில் அடுக்கு மாடிக்குடியிருப்பு பத்து தளங்கள் அமையுமேயானால் மாடிப்படி மற்றும் பொது உபயோகத்திற்கு என உள்ள பரப்பளவைக் கழித்து மீதமுள்ள இடத்தினை நமக்கு கொடுக்கும் சமயம் 240 சதுர அடிக்கு கீழ் தான் பதிய முடியும். நாம் உபயோகிக்கும் பரப்பளவு ஒவ்வொரு தளத்திலும் 2000 சதுர அடியாக இருந்தாலும் நமக்கென்று பதியப்பட்ட பரப்பளவு மிகவும் குறைவு தான். வீடு கட்டக் கூடிய இடம் அனைவருக்கும் பொது. உபயோகப் படுத்தும் பரப்பளவு மட்டும் நமக்குச் சொந்தம். ஆனால் நாம் எந்த விதமான மாறுதல்களும் செய்ய முடியாது. இவ்வாறுள்ள இடங்களில் ஜாதகப்படி வீடு வாங்கும் யோகம் இல்லாதவர்கள் கூட சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த காரணத்தால் தான் ஜாதகப்படி வீடு வாங்கும் யோகம் இல்லாதவர்கள் கூட அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு வாங்க முடிகின்றது.

சில செல்வந்தர்கள் தம்மிடம் உள்ள உபரி பணத்தினை முதலீடு செய்ய வீடுகள் வாங்கி போடுவார்கள். அவ்வாறு உபரி பணத்தினை முதலீடு செய்ய அவர்கள் தேர்ந்தெடுப்பது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்துள்ள வீடுகள். ஜாதகப்படி அவர்களுக்கு வீடுகள் வாங்கும் யோகம் இருப்பதால் அவர்களால் மேலும் மேலும் பல வீடுகள் வாங்கி வாடகைக்கு விட முடிகின்றது அல்லது தமக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவச வசிப்பிடமாக உபயோகித்துக் கொள்ள கொடுக்க முடிகின்றது.  வீடு வாங்கும் யோகம் ஜாதகப்படி இல்லாதவர்களுக்கு அவ்வாறான செல்வந்தர்களின் யோகம் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்குவதால் வந்து விடுகின்றது என்பது வெளியில் தெரியாத வாஸ்து ரகசியம்.

சொந்தமாக வீடு வாங்கும் யோகம் ஜாதகப்படி சில ஆண்டுகள் கழித்து தான் வருகின்றது. தற்போதைக்கு இல்லை. அப்போது என்ன செய்யலாம். நம்மிடத்தில் உள்ள சொற்ப தொகையினை வங்கிகளில் டெபாசிட்டாக செலுத்தி இடம் வாங்கி அந்த இடத்திற்கான பத்திரத்தையும் வங்கியில் வைத்து கடன் பெற்று வீடு கட்டி குடியேறலாம். வீட்டில் குடியிருக்கும் உரிமை மாத்திரம் நமக்கு உண்டு. வீட்டிற்கான கடன் முழுவதும் நாம் வங்கிக்கு செலுத்தி முடிக்கும் வரையில் வீட்டிற்கான அல்லது வீடு கட்டும் இடத்திற்கான மூலப் பத்திரம் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். நாம் கடன் அடைத்து முடிக்கும் வரையில் கடன் கொடுத்த வங்கி தான் இடத்திற்கான உரிமையாளர் என்னும் அந்தஸ்த்தில் இருக்கும். எனவே நமது ஜாதகத்தில் பூமி காரகனாகிய செவ்வாயின் பலவீனத்தால் நமக்கு ஏற்படும் தாக்கம் குறைந்து விடும். ஜோதிடர்கள் சொல்வது போல செவ்வாய் எப்போது பலம் பெறுகின்றாரோ அந்த நேரத்தில் நமது கடன் தொகை முழுவதும் அடைக்கப்பட்டு சொத்துப் பத்திரம் நம் கைக்கு வந்து சேரும்.

இதன்படி தான் தற்போது உள்ள தலைமுறையினர் ஜாதகப் படி கிரக பலாபலன்கள் எப்படி இருந்தாலும் அலுவலகத்தில் கடன் பெற்று வீடு வாங்க முடிகின்றது. வசதியாக வாழ முடிகின்றது.

இதற்கு முந்தைய தலைமுறையினர் அயராது உழைத்து சம்பாதித்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பும் அளவுக்கு தம் வாரிசுகளை உயர்த்தி இருந்தாலும் இவ்வாறான நடைமுறை அப்போது இல்லாத காரணத்தால் தான் அந்த தலைமுறையினர் வீடு வாங்க கஷ்டப்பட வேண்டியிருந்தது.

சிலரது வீடுகள் எப்போதும் அடமானத்தில் தான் இருக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு நம் முன்னோர்கள் சொன்ன அறிவுறைகள் வீடு மற்றும் நிலம் ஆகியவற்றுக்கான பத்திரங்களை நீழ் வசத்தில் தான் (கோர்ட் கட்டு போல) மடக்கி வைக்க வேண்டுமே தவிர அகல வசத்தில் மடக்கி வைக்கக்கூடாது என்பது.

பேசிக் கொண்டிருக்கும் போது என்னவள் திருப்பதி சென்று நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இன்னும் சொல்லவில்லையே என்று கேட்டாள். அதற்கு நான் யார் யார் செல்ல போகின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவள் பெரிய மகனை அழைத்தால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் செலவு செய்ய வேண்டும். மகளை அழைத்தால் கட்டாயம் மரியாதைக்காகவாவது நாம் தான் செலவு செய்ய வேண்டும். அந்த செலவினை இவனுக்கு வைக்க நான் விரும்பவில்லை என்றாள்.

நீங்கள் மூவரும் சேர்ந்து திருப்பதி சென்று அங்குள்ள புஷ்கரணி குளத்தில் குளித்துவிட்டு அந்த குளக்கரையில் அமைந்துள்ள நாகர் விக்ரஹங்களை வழிபட்டு விட்டு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ வராக ராஜப் பெருமாளை வணங்கிவிட்டு திருப்பதி கோயிலுக்குள் செல்ல வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கடவுளை வணங்கி விட்டு வெளியில் வந்த பின்னர் அருகில் இருக்கும் லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் உள்ள வகுள மாதா தேவி அம்மனை வழிபட்டு பெருமாளின் மதில் சுவர்களில் இருக்கும் சிம்ம வாகனங்களை (கருட வாகனம் இருக்காது) வழிபட வேண்டும். அதன் பின்னர் கோபுர ஸ்ரீநிவாசப் பெருமாள் எதிரே (ஆனந்த நிலையம் என்றழைக்கப்படும் விமானத்தில் அம்புக்குறி போட்டு காட்டப்பட்டிருக்கும்) சில நிமிடங்கள் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனைகளை வைத்த பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு உண்டிலுக்கு எதிர்வரிசை மூலையில் வீற்றிருக்கும் யோக நரசிம்மரை வழிபட வேண்டும். யோக நரசிம்மர் சன்னதியை வலம் வரும் சமயம் யோக நரசிம்மருககு வலது புறத்தில் உள்ள ஒரு தூணில் நான்கு கடவுள்கள் இருக்கும் அந்த தூணிற்கு அடியில் தான் திருப்பதி கோயிலுக்கு முதன் முதலாக அடிக்கல் நாட்டப்பட்டது. எனவே அந்த தூணை 3 முதல் 21 முறை வலம் வந்து சொந்த வீடு வாங்க பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். கோயிலுக்குள் செல்லும் சமயம் நேற்றிக் கடன் சாமான்கள் விற்பவர்கள் வீடு போன்று வடிவில் நேற்றிக் கடன் சாமான்  விற்றுக் கொண்டு இருப்பார்கள். அதனை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விட்டு வந்தால் மிக மிக விரைவில் சொந்த வீடு அமையும்.

திருமணம் சுபமாக நடந்தேறிவிட்டதற்கான ஒரு நன்றி தெரிவிப்பினை ஏழுமலையானுக்கு மீண்டும் ஒரு முறை மூவரும் சேர்ந்து மருமகள் கர்ப்பமாகுமுன்னர் மேற்கொண்டால் இன்னும் நல்லது என்று தெரிவித்தேன். அதற்கும் என்னிடமே நாள் குறித்து வாங்கிக் கொண்டு என்னையும் அழைத்தார்கள். எனக்கு அந்த குடும்பத்துடன் சென்று வரும் பாக்கியம் இந்த ஜென்மத்தில் இல்லை என்பது நம் இருவருக்கும் தெரியும்.

இது தவிர வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கேட்டனர்.

https://myloverismyangel.blogspot.com/2018/06/prayers-for-purchase-of-own-house.html


அதற்கு நான் சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 33 கிலோ மீட்டர் தூரத்தில் இடது பக்கம் திரும்பி 3 கிலோ மீட்டர் தூரம் சென்றால் அங்கு சிறுவாபுரி என்னும் இடத்தில் ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திற்கு சென்று ஒரு முறை வழிபட்டு வந்தால் சொந்த வீடு வாங்கும் யோகம் கட்டாயம் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழ் நாட்டிலேயே சொந்தமாக வீடு வாங்கும் பேற்றினை கொடுக்கும் ஒரே கோவில் இது மட்டும் தான். வேறு எங்கும் இது போன்ற கோவில்கள் இல்லை. 

இங்குள்ள முருகன் வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் இங்கு காட்சி தருவதால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கி வீடு கட்டுவதில் உள்ள தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த முருகனை வழிபட்டால் திருமணத் தடைகளும் விலகும் என்பது ஐதீகம்.  எனவே கட்டாயம் சிறுவாபுரி சென்று வாருங்கள் என்று சொன்னேன்.

இந்த நேரத்தில் அவளது மருமகள் திடீரென்று என்னிடம் என்னை நீங்கள் மீண்டும் ஒரு முறை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எனது காலில் விழுந்தாள். நானும் சரியென்று ஆசீர்வதித்து விட்டு மீண்டும் ஒரு முறை எதற்காக என்று கேட்டேன்.

எங்கள் குடும்பத்தின் மீது இவ்வளவு அக்கரையுடன் பொறுமையாக என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டு நான் அசந்து போய் விட்டேன் என்று சொன்னாள். அதற்கு அவள் உனது நாத்தனார் அதாவது விஜியின் திருமணத்திற்கு அவர் இவரிடம் மட்டும் தான் ஆலோசனை கேட்டு திருமணம் செய்து வைத்தார். அப்போது அவளுடைய மகன் அண்ணனுடைய காதல் திருமணத்தை முன்னின்று பேசி நடத்தி வைத்தவரும் இவர்தான் என்பது எனக்கு நீண்ட நாட்கள் கழித்து தான் தெரியும். அதே போல என்னுடைய திருமணத்திலும் அறுவுறைகள் வழங்கியது இவர்தான். மொத்தத்தில் இவர் தான் எங்கள் குடும்ப ஆலோசகர் என்று சொன்னான்.

நான் அந்த குடும்பத்திற்கு ஆலோசகரா அல்லது குடும்பத் தலைவிக்கு நெருக்கமானவரா என்பது பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டியது நானும் அவளும் தான்.

இதற்கு இடையில் சிறப்பு உணவினை அவளும் அவளுடைய மருமகளும் சேர்ந்து தயாரித்து அனைவரும் மதிய உணவு உட்கொண்டோம்.

அவளது மருமகள் வெற்றிலை பாக்கு கொண்டு வரவா அல்லது பீடா கொண்டு வரவா என்று கேட்டாள்.  உடனே என்னவள் அவர் வெற்றிலை பாக்கு பீடி சிகரட் மது போன்ற எதனையும் தொடக் கூட மாட்டார் என்று சொல்ல எப்படி என்று கேட்டாள். அதற்கு என்னவள் சொன்ன பதில் அது அப்படித்தான். 

நான் விடைபெறும் சமயம் அவளது மகனும் மருமகளும் அடுத்து எப்போது வருவீர்கள் என்று கேட்டனர். ஆனால் என்னவள் இவ்வளவு சீக்கிரம் புறப்படவேண்டுமா இருந்து இரவு சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுச் செல்லலாமே என்றாள். அது தான் உண்மையான காதல். நான் எதுவும் பேசாமல் சென்று வருகின்றேன் என்று சொல்லி புறப்பட்ட சமயம் இரண்டு இதயங்கள் சரியென்றாலும் ஒரு இதயம் உள்ளுக்குள் அழ ஆரம்பித்து விட்டது. அது தான் கலாச்சாரக் கைதிகளின் நிலை.