முதலாவது பெண் குழந்தை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் மீண்டும் அவளைப் பார்க்கச் சென்ற சமயம் அவளுக்கு எட்டு மாதம்.
அவளைத் தவிர வீட்டில் யாரும் இல்லை. அந்த நிலையிலும் என்னை வரவேற்ற அவள் எனக்காக சிற்றுண்டி தயாரிக்கின்றேன் என்று கூறினாள். அதற்கு நான் இந்த நிலையில் உன்னை கஷ்டப் படுத்த விரும்பவில்லை. ஒரே ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் கொடுக்கலாமே என்றேன். அதுவும் சரிதான் என்று உள்ளே சென்ற அவள் மிகவும் பெரிய டம்ளரில் குளுகோஸ் போட்ட தண்ணீர் கொண்டு வந்தாள். இதனை நீ பருகலாமா என்று கேட்டேன். அதனால் தான் பெரிய டம்ளர் என்றாள். நானும் அவளும் அவள் வயிற்றில் உள்ள சிசுவும் சேர்ந்து மூவரும் வழக்கம் போல் (1 : 2) தண்ணீர் பருகியாகி விட்டது.
வளை காப்பு எப்படி நடந்தது என தெரிந்து கொள்ளலாமா என்றேன். வளைகாப்பு ஐந்தாம் மாதம் நடத்த வேண்டும் அல்லது ஏழாம் மாதம் நடத்த வேண்டும். எனவே முன்கூட்டியே வந்தால் அந்த சடங்கினைச் செய்ய வேண்டும் என்பதற்காக வளை காப்பினை தவிர்க்க என் தாயார் இந்த மாதத்தில் வருவதாகக் கூறி இருக்கின்றார். எப்போது என்பது தெரியவில்லை.
தலைப்பிரசவம் தாயார் வீட்டில் நடத்த வேண்டும் என்று எல்லா குடும்பங்களிலும் ஆசைப்படுவார்கள். எனக்கு அவ்வாறான குடும்பம் அமைய நான் கொடுத்து வைக்கவில்லை.
என் தாயார் வராவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் என்னை ஊருக்குக் கொண்டு போய் விட்டு வாருங்கள் என்று சொன்னால் அதனைக் கேட்க மறுக்கிறார். கடைசியில் பிரசவம் எங்கு நடக்கும் என்பது தெரியாமல் தவிக்கின்றேன். அது மட்டுமல்ல இப்போதே எனக்கு வலி ஏற்பட்டு விடுகின்றது. கீழே உள்ள குடித்தனக்காரர்களுடன் டாக்டரிடம் சென்றால் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம் என்று சொல்கின்றார்கள். எனக்கு பயமாக இருக்கின்றது என்று கண் கலங்கினாள்.
உனக்கு சொந்த ஊர் செல்ல ரிசர்வேஷன் இரயில் டிக்கட் (VIP) நான் ஏற்பாடு செய்து தருகின்றேன். எப்போது எத்தனை பேர் என்று மாத்திரம் எனக்கு தெரியப்படுத்தினால் போதும் என்றேன்.
அதற்கு என் தாயார் வரவேண்டும். அதன் பின்னர் தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும். என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறி வலி தாங்க முடியாமல் தவித்தாள். நான் கீழே உள்ளவர்களை அழைத்து வரட்டுமா டாக்டரிடம் சென்று வரலாமே என்றேன். அதற்கு நேற்றைக்கே ஆஸ்பத்திரியில் சேருமாறு சொன்னார்கள். அவர் என்னை வலுக்கட்டாயமாக திரும்ப அழைத்து வந்து விட்டார். எனவே இப்போது போனால் ஆஸ்பத்திரியில் சேர்த்துக் கொள்வார்கள். அதற்கு அவரிடம் பதில் சொல்ல முடியாது என்று கண்ணீர் விட்டது எனக்கு மிகவும் சோகத்தைத் தந்தது.
அதன் பின்னர் அவளுக்கு வைத்திருந்த தின் பண்டங்களை நாம் இருவரும் சேர்ந்து உண்டு சற்று நேரம் அவள் கவலையிலிருந்து விடுபட்ட பின்னர் நான் எனது அறைக்குத் திரும்பினேன். அதன் பின்னர் தொடர்ந்து அவள் நினைவாகவே இருந்தேன்.
அடுத்த 15 தினங்களில் நான் அலுவலகப் பணி காரணமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் வெளியூர் செல்லு முன்னர் ஒரு முறை அவளைப் பார்த்துவிட்டு செல்ல முடிவு செய்து அவளது வீட்டிற்கு சென்றேன்.
அப்போது அவளது தாயார் அங்கு இருந்தார். என்னைப் பார்த்தவுடன் இங்கும் வந்து என் மகளைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டாயா என்று கேட்டு வெளியே போ என்று சொன்னவுடன் அவள் அவளது தாயாரிடம் நாவை அடக்கிப் பேசு அவர் காதில் விழுந்தால் நம் இருவரையும் சேர்த்து துரத்தி விடுவார் என்று கோபமாகக் கூறினாள்.
அதன் பின்னர் அவள் சொந்த ஊருக்கு பிரசவத்திற்காக நாளை இரவு இரயில் மூலம் புறப்பட இருப்பதாகக்கூறி இரயில் டிக்கட்டுகளைக் காண்பித்தாள். நானும் சரியெனக் கூறி பின்னர் புறப்பட்டு விட்டேன்.
அன்றைய தினமே அலுவலக வேலையாக நான் சொந்த ஊர் சென்று தங்கி விட்டேன். மறு நாள் காலை பயணியர் விடுதியிலிருந்து இரயில் நிலையத்திற்கு அவள் வரும் இரயில் வந்து சேரும் நேரத்திற்கு 15 நிமிடம் முன்னதாக போய்ச் சேர்ந்தேன். இரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. அவள் குறிப்பிட்ட இரயில் பெட்டியிலிருந்து இறங்கவில்லை. எனக்கு ஒரே குழப்பம். இந்த இரயிலில் பயணம் செய்யத் தான் இரண்டு டிக்கட்டுகள் ரிசர்வ் செய்து டிக்கட்டுகளை என்னிடம் காண்பித்தாள். ஆனால் வரவில்லையே என்ன காரணம் என்று விசாரிக்க முற்பட்டேன். இரயில் ஓட்டுநர் மற்றும் கார்டு இருவரையும் தொடர்பு கொண்டு விசாரணை செய்ததில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ வலி ஏற்பட்டு துடித்த காரணத்தால் நடுவில் உள்ள பெரிய ஊரில் இறக்கி விட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அப்போது தான் தெரிந்தது. சென்ற முறை சென்ற சமயம் அவளது அழுகையின் பின்னணி. வலியால் எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால் என்னிடம் காட்டிக் கொள்ளாமல் என்னை அந்த நிலையிலும் குளுகோஸ் கலந்த நீரைக் கொடுத்து கவனித்திருப்பாள் என்று. இது தான் அவள் என் மீது வைத்துள்ள காதலின் முழுமையான வெளிப்பாடு.
அப்போது தான் தெரிந்தது. சென்ற முறை சென்ற சமயம் அவளது அழுகையின் பின்னணி. வலியால் எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால் என்னிடம் காட்டிக் கொள்ளாமல் என்னை அந்த நிலையிலும் குளுகோஸ் கலந்த நீரைக் கொடுத்து கவனித்திருப்பாள் என்று. இது தான் அவள் என் மீது வைத்துள்ள காதலின் முழுமையான வெளிப்பாடு.
மீண்டும் அவளைப் பார்க்க அவள் வீட்டிற்குக் செல்ல வேண்டும் என்று மனதில் எண்ணங்கள் தோன்றினாலும் பிரசவத்திற்குப் பின்னர் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார்களா அல்லது கணவன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்களா என்னும் விவரம் தெரியாமல் செல்வது நல்லதல்ல என்னும் காரணத்தால் சொந்த ஊர் சென்ற சமயம் என் நண்பனை அதாவது அவளது உறவினரை நேரில் பார்த்து விவரம் அறிந்து எனக்கு நேரிலோ அல்லது தொலை பேசியிலோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
என் நண்பனும் விசாரணை மேற்கொண்டு அவள் பிரசவத்திற்குப் பின்னர் மீண்டும் கணவன் வீட்டுக்கே திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு விட்டாள் என்று தெரிவித்தான்.
முதலாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கும் சேதியினையும் தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றார்கள் என்னும் சேதியினையும் தெரிவித்தான்.
முதலாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கும் சேதியினையும் தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றார்கள் என்னும் சேதியினையும் தெரிவித்தான்.
அவள் ஆசைப் பட்ட படி இனி மேல் அவளையும் விஜியையும் சேர்ந்து பார்க்கலாம் என்பது எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்