குட்டி தேவதைக்கு திருமண ஏற்பாடுகள்.
அப்போது அவளும் அவளது கணவரும் வேறு ஒருவரும் ஆழ்ந்த உரையாடலில் இருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் அவள் வாருங்கள் என வரவேற்க அவளது கணவர் நமது மகள் வாழ்க்கை பற்றி நாம் மட்டும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதைவிட இவரிடமும் சில யோசனைகள் கேட்கலாம் என்று தோன்றுகின்றது என்று சொன்னார்.
நான் விவரம் தெரியாமல் என்னவென்று கேட்க அவள் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். இவர் தரகர் எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டு வந்து இருக்கின்றார். இனிமேல் ஜாதகத்தைக் கொடுத்து ஏற்பாடுகள் செய்யப் போகின்றோம். நல்ல வேளை நீங்கள் தக்க சமயத்தில் வந்துள்ளீர்கள் என்று சொன்னாள்.

அதற்கு நான் உங்கள் மகளுக்கு வரன் பார்ப்பதற்கு என்னிடம் ஏன் ஆலோசனை கேட்க வேண்டும் என்று கேட்டதற்கு அவளது கணவர் எனக்கும் இவளுக்கும் வீடு கடைகள் வசூல் தவிர வேறு எதுவும் சரியாக தெரியாது. ஆனால் நீங்கள் அலுவல் காரணமாக பல இடங்களுக்குச் சென்று வருவதனால் நிறைய அனுபவம் இருக்கும் அதனால் தான் என்று கூறினார்.
அவர் என்ன மனதில் வைத்துக் கேட்கின்றார் என்பது எனக்கு சரியாக புரியாத காரணத்தால் அவளிடம் ஜாடையாக கேட்டேன். உடனே அவள் ஆலோசனை வழங்குமாறு சைகை மூலம் பச்சை கொடி காட்டினாள். நானும் சரியென ஒப்புக் கொண்டேன்.
என்னிடம் அவளும் அவளது கணவரும் சேர்ந்து இவர் தான் கல்யான தரகர் என்று அறிமுகப் படுத்தி வைத்தார்கள். நானும் வணக்கம் சொன்னேன். அதன் பின்னர் கல்யான தரகரிடம் தட்சணையுடன் ஜாதகம் நல்ல நேரம் முடிவதற்குள் கொடுக்க வேண்டும். எனவே நல்ல நேரம் பார்த்து தான் தரகரை வரவழைத்து இருப்பீர்கள். நல்ல நேரம் முடிவதற்குள் ஜாதகத்தை தரகரிடம் கொடுத்த பின்னர் நாம் எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்று ஆலோசிக்கலாம் என்று சொல்ல அவளது கணவர் என்னையும் பூஜை அறைக்கு வருமாறு அழைத்து மணப்பெண்ணின் ஜாதகத்தை ஒரு தட்டில் வைத்து பூஜை செய்து அதன் பின்னர் தரகரிடம் கொடுத்தார்கள். அப்போது நான் வெறும் ஜாதகத்தை மாத்திரம் வைத்து பூஜை செய்யக் கூடாது எனச் சொல்லி வேறு ஏதேனும் இனிப்பு பண்டங்கள் உள்ளதா எனக் கேட்டேன்.
அவள் வீட்டில் கல் கண்டு இருக்கின்றது என்று புன்னகையுடன் சொன்னாள். நான் அதனை எடுத்து வருமாறு கூறி நான் கொண்டு சென்று இருந்த இனிப்பு பெட்டியிலிருந்து சுவீட் எடுத்து தட்டில் வைத்து பூஜை செய்தனர்.
அவள் வீட்டில் கல் கண்டு இருக்கின்றது என்று புன்னகையுடன் சொன்னாள். நான் அதனை எடுத்து வருமாறு கூறி நான் கொண்டு சென்று இருந்த இனிப்பு பெட்டியிலிருந்து சுவீட் எடுத்து தட்டில் வைத்து பூஜை செய்தனர்.
எனக்கு ஒரு சந்தோஷம். இத்தனை நாட்கள் கழித்து வந்திருந்தாலும் என்னவளது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் சமயம் ஆண்டவன் என்னை அனுப்பியிருக்கின்றான் என்று. அதே போலத் தான் அவளுக்கும்.
ஜாதகத்தைப் பெற்றுக் கொண்ட தரகர் பெண்ணின் ராசி நட்சத்திரம் படிப்பு ஆகியவற்றை பார்த்த பின்னர் அந்தப் பெண்ணின் வயதுக்குப் பொருத்தமான சில ஜாதகங்களை கொடுத்தார். கொடுத்து விட்டு பெண்ணின் ஜாதகத்தையும் பையன்களின் ஜாதகத்தையும் ஜோசியரிடம் காட்டி பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த சமயம் அவளது கணவர் அவளிடம் குடிப்பதற்கு பானம் கொண்டு வருமாறு கூறினார். நான் உடனே முதல் முறையாக ஜாதகம் கொடுக்கும் சமயம் இனிப்பு காரம் காப்பியுடன் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி நான் கொண்டு சென்றிருந்த இனிப்பு கார வகைகளையும் சேர்த்து அனவைருக்கும் பரிமாறுமாறு கேட்டுக் கொண்டேன். அவளும் அதே போல பரிமாறும் சமயம் வெளியிலிருந்து எனது குட்டி தேவதை சிரித்த முகத்துடன் உள்ளே வந்தாள். அவளது தந்தை பெண்ணை தரகரிடம் காண்பித்து இவள் தான் மணப் பெண் என்று கூறினார். தரகர் பெண்ணைப் பார்த்தவுடன் இவ்வளவு அழகாக இருக்கின்றாள் திருமணத்தை உடனே முடித்து விடலாம் என்று சந்தோஷமாக கூறியவுடன் எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.
அதன் பின்னர் அவளது கணவர் எந்த மாதிரியான வரன்கள் பார்க்கலாம் என்று என்னிடம் ஆலோசனை கேட்க ஆரம்பித்தார்.
நான் அவளிடமும் அவளது கணவரிடமும் உங்கள் மகளை இதுவரை எத்தனை நாட்கள் பிரிந்து இருந்திருப்பீர்கள் என்று கேட்டேன். அதற்கு இருவரும் இதுவரை பிரிந்து இருந்தது கிடையாது. எங்கேயாவது சென்றால் இன்னமும் வரவில்லையே என்ற மனச் சஞ்சலம் வந்து விடும். என்றனர்.
உடனே நான் உங்கள் மகளை வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்தால் குறைந்தது ஆறு மாத கால இடைவெளியில் தான் அவளைப் பார்க்க முடியும். அது தவிர நினைத்த நேரத்தில் நாம் வெளி நாடு செல்வது என்பது முடியாத காரியம். பாஸ்போர்ட் விசா என பலவற்றைத் தாண்டி நாம் சென்று வருவது என்று தீர்மானித்தாலும் நமது உடல் நிலை மற்றும் விமான டிக்கட்டுகளுக்கான செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.
அது மட்டுமல்லாது வரப் போகின்ற வரன் தாராள மனம் கொண்டவராக இருந்தால் இரு வீட்டாரது நல்லது கெட்டது அனைத்திலும் தவறாது கலந்து கொள்ள முடியும். அவ்வாறில்லாது சிக்கனம் பார்ப்பவராக அமைந்து விட்டால் நீங்கள் உங்கள் மகளை நினைத்த நேரத்தில் பார்க்க முடியாது அதே போல உங்கள் மகளும் உங்களைப் பார்க்க நினைத்த நேரத்தில் வரமுடியாது. அத்துடன் உங்கள் மகளுக்கு கரு உருவாகி விட்டால் பிரசவத்திற்கு நாம் வெளிநாடு செல்ல வேண்டும். அல்லது அவளை வெளி நாட்டிலிருந்து அழைத்து வர வேண்டும். அத்துடன் பேரன் அல்லது பேத்திகளை நீங்கள் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் வரும். எனவே உங்களது நிலைமையில் பார்க்கும் போது உள்நாட்டு மாப்பிள்ளை தான் பொருத்தமானதாக இருக்கும் என்றவுடன் அவருக்கு மாத்திரமல்ல இருவருக்கும் மிக்க சந்தோஷம்.
உள்நாட்டு மாப்பிள்ளைகளில் எந்த மாதிரி தேர்வு செய்யலாம் என்று கேட்டனர். நான் உடனே ஏதேனும் வங்கிகளிலோ அல்லது பொதுத் துறை நிறுவனங்களிலோ வேலை பார்க்கும் மாப்பிள்ளை பார்த்தால் நிறைய சம்பளம் வரும் நமது பெண் மிகவும் சந்தோஷமாக இருப்பாள். அதே போல மத்திய அரசாங்க அல்லது மாநில அரசாங்க உத்தியோகத்தில் உள்ள வரன்களைப் பார்த்தால் நிலையான வருமானம் மற்றும் வயதான பின்னர் ஓய்வுதியம் என கடைசி காலம் வரை நிம்மதியாக இருக்கலாம். வியாபாரம் செய்யும் வரன்களைப் பார்த்தால் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொன்னேன்.
பெண் மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்து இருப்பதால் வருகின்ற மாப்பிள்ளை அதற்கு மேல் படித்து இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க வேண்டாம். அதே மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பு முடித்து நல்ல வேலையில் நல்ல வருமானத்தில் இருந்தால் போதும் என்று நினைக்க வேண்டும். பெண் மூன்று ஆண்டுகள் படித்து மாப்பிள்ளை ஐந்தாண்டுகள் பட்டப்படிப்பு முடித்து அதன் பின்னர் மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்பு படித்து நல்ல வருமானத்துடன் உயர்ந்த பதவியில் இருப்பாரேயானால் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் உள்ளது என்று நிராகரிக்க வேண்டியிருக்கும்.
அதே போல ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்து வரன் தேடுவதாயின் அழகு அந்தஸ்து ஆகியவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும். ஜாதகப் பொருத்தம் நன்றாக இருக்க வேண்டும். உள்ளுரிலேயே இருக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும். நல்ல வேலையில் இருக்க வேண்டும். போதுமான சம்பளம் இருக்க வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் நல்ல அந்தஸ்துடன் வீடு நிலம் ஆகியவற்றை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் ஒரு சேர எதிர் பார்ப்பது சரியல்ல.
ஏனெனில் பல தருணங்களில் ஜாதகப் பொருத்தம் சரியில்லை அந்தஸ்து சரியில்லை என்று நாம் வரன்களை ஒதுக்கும் சமயம் நீண்ட காலம் ஒற்றுமையாகவும் அன்பாகவும் தேக ஆரோக்கியத்துடனும் வசதியாகவும் வாழக்கூடியவர்கள் கூட பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சொன்னேன்.
நான் சொன்னது அவளது கணவருக்கோ அந்த தரகருக்கோ புரிந்ததோ இல்லையோ எனது தேவதைக்கு எனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொந்த கருத்தினை காதல் தோல்வியினை நமது சார்பில் நாசூக்காக தன் கணவரிடம் எடுத்துச் சொல்கின்றார் என்பதனை மட்டும் தெரிந்து கொண்டாள்.

உடனே இருவரும் தரகரிடம் என்ன தரகரே புரிஞ்சதா என்று கேட்டனர். அதற்கு தரகர் அவர் அவரது கருத்துக்களை சொல்லி விட்டார். நீங்கள் மணப் பெண்ணின் பெற்றோர். அதனை ஆராய்ந்து உங்கள் எதிர்பார்ப்பினை சொல்லுங்கள் என்றார். அதன் பின்னர் அவளும் அவளது கணவரும் என்னை தனியே அழைத்துச் சென்று முடிவெடுத்தனர். அதன் படி வெளி நாட்டு மாப்பிள்ளை மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மாப்பிள்ளை தவிர பிற வகையான மாப்பிள்ளை ஜாதங்களைக் கொடுக்குமாறு கேட்டு அதன் படி டாக்டர் இஞ்சினியர் மற்றும் அரசு வேலையில் உள்ளவர்கள் ஜாதகங்களை மட்டும் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் தரகர் விடை பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் அவளது கணவர் ஒரு நோட்டினை எடுத்து தமது மகளது திருமணத்திற்கு அழைக்க வேண்டிய பட்டியலாக எனது பெயரினை முதலாவதாக எழுதச் சொன்னார். நானும் எனது வீட்டு விலாசம் மற்றும் அலுவலக முகவரி இரண்டினையும் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து நீங்கள் ஆபீசர் ஆகி விட்டீர்களா என்று கேட்டார். நானும் ஆமாம் என்றேன். உடனே அவளிடம் உனக்கு வீடு தெரியுமல்லவா என்று கேட்டார். அதற்கு அவள் உங்களைத் திருமணம் செய்வதற்கு முன் இருந்த வீடு தான் ஞாபகம் இருக்கின்றது. அதனையும் தேட வேண்டும். இப்போது உள்ள வீடு தெரியாது என்று சொன்னாள்.
தரகரை வழியனுப்ப அவளது கணவர் வெளியே சென்றார்.
அந்த நேரத்தில் பார்த்தீர்களா நாம் இருவரும் சேர்ந்து பெயர் வைத்த நம் மகளுக்கு நாம் இருவரும் சேர்ந்து ஜாதகம் கொடுக்கும் நிலையினை ஆண்டவன் உருவாக்கி இருக்கின்றான் என்றாள்.
அதன் பின்னர் அவள் தன் மகளை அழைத்து பார்த்தாயா நீ பாபா பாபா என்று அழைத்தவர் சரியான நேரத்திற்கு வந்து உனது திருமணம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி இருக்கின்றார் என்று சொன்னவுடன் என்னுடைய பாபா வராமல் எதுவும் நடக்காது என்பது எனக்குத் தெரியும் என்று கூறியதைக் கேட்ட எனக்கு மிக மிக மகிழ்ச்சி.
அதன் பின்னர் அவள் என்னிடம் திடீரென இங்கு வந்ததன் நோக்கம் என்ன என்று கேட்டாள்.
உன்னைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. அது தவிர நான் இங்கு பணியாற்றிய பொழுது உடன் பணியாற்றிய முஸ்லிம் பெண் உடனடியாக புறப்பட்டு வருமாறு கடிதம் எழுதியிருந்தாள். என்னவென்று நேற்று காலை வந்து மாலையில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தேன்.
உடனே என்ன பிரச்னை என்றாள். அவள் ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்ததிலிருந்து அவர் வெளி நாட்டிலிருந்து வரவில்லை. அவளையும் வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. வருடத்தில் ஒரு மாதம் அல்லது 15 நாட்கள் லீவு எடுத்து வந்து மீண்டும் திரும்பி விடுவார். அவளை அவர் ஒரு இன்பம் கொடுக்கும் பொருளாகவும் பிள்ளை பெறும் எந்திரமாகவும் தான் பாவிக்கின்றார். எனவே இருவருக்குள்ளும் சரியான புரிதல் இல்லை. நீ எப்படி என்னை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று தவிக்கின்றாயோ அதே போல் அவளும் என்னைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் இவ்வாறான பிரச்சனைகள் இருந்திருக்காது என்று நினைக்கின்றாள் என்றேன்.
பிரச்சினை என்னவென்றால் பிறந்துள்ள இரண்டு குழந்தைகளில் முதல் பெண் குழந்தை இன்னமும் பருவத்திற்கு வரவில்லை என்பது முதல் கவலை.
இதனைக் கேட்டவுடன் என்னவள் அந்தப் பெண்ணுக்கு அளவுக்கு அதிகமான இனிப்புகள் அதாவது கோதுமை அல்வா கொடுத்து நன்றாக வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கச் சொல்லுங்கள். ஏனெனில் நான் வயதுக்கு வந்தவுடன் என் தாயார் என்னிடம் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடாதே அளவுக்கு அதிகமாக சிரிக்காதே என்று சொல்லியும் என் பேச்சைக் கேட்காததால் உனக்கு வீடு மாற்றப் போகும் இந்த நேரத்தில் பருவம் வந்து விட்டது என்று சொல்லி அவளைக் கடிந்து கொண்டதை நினைவு படுத்திச் சொன்னாள். நான் பருவமைடைந்த பத்து நாட்களில் நீங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் நான் குடி வந்து அடுத்த ஐந்து நாட்களில் உங்களிடம் என் மனைதைப் பறி கொடுத்து நாம் இருவரும் காதலர்களாகி விட்டோம் என்று சொன்னாள். அதே போல் நீங்கள் அந்தப் பெண்ணுக்கு அறிவுறை வழங்குமாறு கூறினாள். நானும் சரியென்று ஒப்புக் கொண்டேன்.
அடுத்த படியாக இரண்டாவது பெண் குழந்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் காணாமல் போய் விட்டது. இந்த விவரம் வெளி நாட்டில் உள்ள தனது கணவருக்குத் தெரியப் படுத்தியவுடன் இந்தியா புறப்பட்டு வந்து காவல் துறையில் புகார் அளித்து விட்டு பத்து பதினைந்து நாட்கள் அவளிடம் சுகம் அனுபவித்து விட்டு மீண்டும் வெளி நாடு சென்று விட்டார். அவளது பெற்றோர் அவளுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. இதனால் மனமுடைந்து என்னை வரச் சொல்லி நானும் அவளும் தனியே சந்தித்து என்னிடம் ஆறுதல் பெற்றுச் சென்றுள்ளாள். இன்று மாலை நான் மீண்டும் அவளைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாள் என்பதனை தெரிவித்தேன்.

உடனே அவள் அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள் எனக்குக் கேட்க பரிதாபமாக இருக்கின்றது என்று சொன்னது கேட்டு நான் அவளிடம் இன்று மாலை சொல்லிப் பார்க்கின்றேன் சரியென ஒப்புக் கொண்டால் நாளை அழைத்து வருகின்றேன் என்று கூறினேன்.
அவளது சோகக் கதையினை நேற்று கேட்டபடியால் தான் இன்று நம் மகளுக்கு சரியான ஆலோசனை சொல்ல முடிந்தது என்று கூறினேன்.
அப்பொழுது தரகரை வழியனுப்பச் சென்ற அவளது கணவர் திரும்ப வந்து விட்டார். நான் புறப்படத் தயாரானேன். உடனே இருவரும் என்னிடம் மதியச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும் எனக் கூற எனது குட்டி தேவதை கூட இன்று என்னுடைய முதல் சமையல் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள நான் என் குட்டி தேவதையின் கரங்களால் பரிமாற மதிய உணவு உட்கொண்டு வந்தேன்.

நான் திரும்பி வரும் சமயம் அவளும் அவளது மகளும் சேர்ந்து மிக்க சந்தோஷத்துடன் என்னை கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.
இதன் மூலம் அவள் வீட்டில் நடக்கவிருக்கும் முதலாவது திருமண சுப காரியத்திற்கு நான் தக்க நேரத்தில் சென்று தகுந்த ஆலோசனை வழங்கி வந்துள்ளேன் என்னும் மனத்திருப்தி எனக்குள் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் அவள் வீட்டில் நடக்கவிருக்கும் முதலாவது திருமண சுப காரியத்திற்கு நான் தக்க நேரத்தில் சென்று தகுந்த ஆலோசனை வழங்கி வந்துள்ளேன் என்னும் மனத்திருப்தி எனக்குள் ஏற்பட்டுள்ளது.