பெண் பார்ப்பதற்கு முன் என் தேவதையுடன் ஒரு கலந்துரையாடல்
என்னை எதிர்பார்த்து ஏங்கி அன்றைய தினம் அவள் வாசல் படிக்கே வந்து விட்டாள். காரணம் நான் சற்று தாமதம்.
பறவைகள் எவ்வளவு தான் உயர உயர பறந்தாலும் கடைசியில் தனது கூட்டிற்கு வந்து தான் ஆக வேண்டும். அது போல நான் எவ்வளவு தான் மிக நெருக்கமாக வேறு யாருடன் பழகினாலும் என்னுடைய இதயம் அவளை நாடியே செல்லும். அது போலத் தான் அவளுடைய இதயமும்.
நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவளது குழந்தை சற்று சோகத்துடன் எனது கால்களை இறுக்கப் பிடித்துக் கொண்டது. ஏன் என்று கேட்டதற்கு சாக்லெட் கேட்டு அடம் பிடிக்கின்றாள் என்று பதில் வந்தது. உடனே நான் என்னுடன் கொண்டு சென்றிருந்த சாக்லெட் கொடுத்தேன். உடனே அவள் ஒன்று மட்டும் கொடுங்கள். இத்தோடு இன்று இவளுக்கு நான்காவது என்றாள்.
சரி நான் உனக்கு பாதி கொடுக்கட்டுமா வேண்டாமா என்று கேட்டேன். என்னுடைய பங்கில் குறை வைக்க நான் எந்த காலத்திலும் விட மாட்டேன். ஏனெனில் அது எனது உரிமை என்றவாறே எங்கே என் பங்கு என்று கேட்டாள். உடனே நான் கொண்டு சென்றிருந்த சாக்லெட் பெட்டியினையும் இனிப்புகளையும் அவளிடம் கொடுத்து நீயே எனக்கு பாதி கொடு என்றேன். உடனே அவள் பாதி சாக்லெட்டை கடித்து மீதியினை என்னிடம் நீட்டினாள். அச்சமயம் குழந்தை அதற்கு கை நீட்டியது. என்னிடம் கொடுத்தால் குழந்தையிடம் கொடுத்து விடுவேன் என்று நினைத்து அவளே என் வாயில் சாக்லெட் வைத்து விட்டாள்.
அதன் பின்னர் என் சிநேகிதி கொடுத்து அனுப்பியுள்ள சமையல் தொடர்பான காசட்டினை அவளிடம் கொடுத்தேன். அவள் என்ன திரைப்படம் என்று கேட்டாள். அதற்கு நான் என் அலுவலக சிநேகிதி உனக்காக அவள் இதுவரை தொலைக் காட்சிக்கு தொகுத்துக் கொடுத்துள்ள நிகழ்ச்சிகளையும் இனி வரும் வாரங்களில் வரப் போகின்றவற்றையும் கொடுத்துள்ளாள். நேரம் கிடைக்கும் போது சாவகாசமாக இதனை போட்டுப் பார்த்து உனக்கு என்ன என்ன உணவுகள் பிடிக்கின்றதோ அதனை எல்லாம் சமைத்து பழகிக் கொள் என்று சொன்னேன். அவளது தொகுப்புகள் எல்லாம் சுத்த சைவமாகவும் ருசியானதாகவும் சுவையுள்ளதாகவும் இருக்கும் என்று சொன்னேன். கொடுத்து அனுப்பியதில் அவளுக்கு சந்தோஷம் பெற்றுக் கொண்டதில் என் காதலிக்கு சந்தோஷம்.
உடனே ஒரு வருத்தம். இவ்வளவு அழகானவள் ருசியாகவும் சுவையாகவும் சமைத்து உங்களை கவர முடிகின்றது. ஆனால் என்னால் இதற்குப் பின்னர் சமைக்கப் பழகி என்ன செய்ய முடியும் என்று கேட்டாள். அதற்கு நான் வரும் சமயம் எனக்கு கொடு என்றேன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதற்கும் இடம் கொடுக்கவில்லையே என்று ஏங்கினாள்.
இன்று அவர்களைப் பற்றி பேசாமல் நம்மைப் பற்றி மட்டும் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
உடனே திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலம் எப்படி இருக்கின்றது என்று கேட்டாள். உடனே நான் சென்ற வாரம் எனது அண்ணனும் அண்ணியும் சொந்த ஊர் சென்று பெண் பார்த்து வந்தார்கள். அவ்வாறு சென்றிருந்த சமயம் என் தாயார் எனக்குப் பிடித்தமான பெண் நீ தான் என்றும் அண்ணன் அண்ணி இருவரையும் அழைத்துக் கொண்டு போய் உன்னைக் காட்டி வருமாறும் சொல்லி அனுப்பியுள்ளார்கள். எனவே உன்னைக் காட்ட அடுத்த வாரம் நான் என் அண்ணன் அண்ணியுடன் வரப் போகின்றேன் என்று சொன்னேன்.
உடனே அவள் இந்த சம்பவம் என் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன் நடந்து இருந்தால் நான் தான் உங்கள் மனைவி. ஆனால் இப்போது வருவதனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கப் போவதில்லை என்று வருத்தப் பட்டாள்.
அவளிடம் சொல்லி வந்தது போல அடுத்த வாரம் நான் எனது அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோரை அழைத்துக் கொண்டு அவளது இல்லத்திற்குச் சென்றேன்.
புன்சிரிப்புடன் அவள் என்னை வரவேற்றாள். அவளது குழந்தை வழக்கம் போல என்னிடம் வந்து விட்டது. அவளது கணவர் என்னிடம் யார் இவர்கள் என்று கேட்க நானும் எனது அண்ணன் அண்ணி என்று அறிமுகப் படுத்தினேன். உடனே அவர் என்ன வேலையாக வந்து இருக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு என் அண்ணன் இந்த ஏரியாவில் குடி வருவதற்கு நல்ல வீடு ஏதேனும் வாடகைக்கு கிடைக்குமா என்று தேடி வந்துள்ளோம் என்று கூறினார். உடனே எனக்குத் தெரிந்த நண்பர் வீடு காலியாக இருப்பதாகவும் விசாரித்து வருவதாகவும் சொல்லி புறப்பட்டுச் சென்றார்.
உடன் என் அண்ணி வீடு கிடைத்து விட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று கேட்டார். உடனே அவள் இவர் வந்து விட்டால் ஏதேனும் சாக்குப் போக்கு சொல்லி வெளியேறி விடுவார் என்று சொன்னாள். நீண்ட நேரம் கழித்து திரும்பி வந்து எப்போது திரும்பினார்கள் என்று கேட்பார் என்றும் கூறினாள்.
அப்போது எனது தாயார் வந்து அவளைப் பார்த்த பின்னர் இரண்டு வாரங்கள் உடல் நலமின்றி இருந்ததும் அவள் மீது எனது தாயார் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்றும் சொல்லியது கேட்டு அவள் இதனை நீங்கள் இதுவரை ஏன் என்னிடத்தில் சொல்லவில்லை என்று கேட்டாள். அதற்கு நான் உன்னிடம் சொன்னால் மட்டும் நீ வந்து என் தாயாரைப் பார்த்துக் கொள்ள முடியப் போகின்றதா என்று கேட்டேன். அதற்கு அவள் அதுவும் சரி தான் என்று சொன்னாள்.
அதற்குப் பின்னர் சிற்றுண்டி கொடுத்தாள். எனது அண்ணனும் அண்ணியும் என்ன என்று கேட்டு பிரியமுடன் வாங்கி உட் கொண்டார்கள். நானும் குழந்தையுடனும் அவளுடனும் வழக்கம் போல்.
அதன் பின்னர் பானம் வந்தது. நான் பாதி குடித்து விட்டு அவளுக்குப் பாதி கொடுத்தேன். இதனை கவனித்த எனது அண்ணியார் எனது அண்ணனிடம் இவர்கள் இவ்வளவு அன்பாக இருக்கின்றார்கள். நீங்கள் திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் பிறந்த பின்னர் கூட இது வரை எனக்கு பாதி கொடுத்தது இல்லை என்றவாறே இவ்வளவு அந்யோன்யமாக பழகிய பின்னர் எவ்வளவு தான் அழகாகவும் அடக்கமாகவும் எந்த பெண்ணைப் பார்த்தாலும் உனக்குப் பிடிக்காது என்று அவள் எதிரிலேயே என்னிடம் சொன்னார்கள்.
இதனை அறிந்து கொள்ளத் தான் நீங்கள் என் வீட்டிற்கு இவருடன் வந்து இருக்கின்றீர்கள். நான் என்னைப் போன்று அழகாக அடக்கமாக அந்யோன்யமாக நிச்சயமாக உங்ளுக்குப் பெண் கிடைக்காது இருந்தாலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கின்றேன் என்று சொன்னாள்.
எல்லாவற்றிற்கும் மேலாக எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது கூட பார்க்காமல் நாம் இருவரும் இப்படி ஒற்றுமையாக இருப்பது என்பது எங்கும் நடக்காத ஒன்றாகத் தான் இருக்கும் என்று கூறி அவர்களை அசத்தி விட்டாள்.
அதற்குப் பின்னர் அவளிடம் குழந்தையைப் பற்றி விசாரித்தார்கள். அப்போது குழந்தைக்கு தனது அப்பாவை விட இவரைத் தான் ரொம்ப பிடிக்கும் எனக்குப் பிடித்தது போல. இதுவரையில் நான் எவ்வளவு முயற்சித்தும் என்னிடம் சிரித்து மட்டுமே காட்டும். ஆனால் இவரிடம் மாத்திரம் மழலை மொழியில் பேசும். வேண்டுமானால் பாருங்களேன் என்றாள். நானும் வேறு வழியில்லாது குழந்தையிடம் அம்மா அம்மா என்று சொல்ல ஆரம்பித்தேன். குழந்தை உடனே பாபா பாபா என்று சொல்ல ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில் அவள் இப்போது பாருங்கள் எனக் கூறிக் கொண்டே குழந்தையிடம் அம்மா அம்மா என்று கற்றுக் கொடுத்தாள். அதற்கு குழந்தை சிரித்து மட்டுமே காட்டியது. பேசவில்லை. எனக்கும் ஒரே ஆச்சர்யம்.
எனது அண்ணியார் ரொம்ப நேரம் ஆகி விட்டது சீக்கிரம் புறப்படலாம் என்று சொன்னவுடன் குழந்தையை அவள் பெற்றுக் கொள்ள முயற்சித்தாள். குழந்தை அவளிடம் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தது. உடனே சற்று நேரம் பொறுத்து இருங்கள் என்று சொல்லி ஒரு சாக்லெட்டை குழந்தையிடம் நீட்டி குழந்தையை பெற்றுக் கொண்டு இருவரும் சிரித்துக் கொண்டே மிக்க சந்தோஷத்துடன் நம் மூவருக்கும் விடை கொடுத்து வழி அனுப்பினர்.
எனது அண்ணன் அண்ணி இருவரும் எனக்கு இவ்வளவு நெருக்கமான உறவு கிடைத்திருக்கும் போது வேறு யாரையும் பிடிக்காது என்பதனை ஒத்துக் கொண்டார்கள்.